WORKING CLASS

சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள்

...Full Text

கோட்டை நோக்கி பேரணி

...Full Text

மேதினப் பேரணி

...Full Text

தமிழ்நாடு முதலாளிகளுக்குச் சொர்க்கமாகவும் தொழிலாளர்களுக்கு நரகமாகவும் இருப்பதை இனியும் அனுமதிக்க மாட்டோம்

மார்ச் 23, பகத்சிங் நினைவு தின உறுதியேற்பு இளைய இந்தியா இன்றைய இந்திய மக்கள் தொகை 123 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 631. இதில் 54% பேர் 25 வயதுக்குக் கீழானவர்கள். 65% பேர் 35 வயதுக்குக் கீழானவர்கள். 2020ல் இந்திய மக்களின் சராசரி வயது 29 ஆகவும் தமிழ்நாட்டு மக்களின் சராசரி வயது 31 வருடங்கள் 3 மாதங்களாகவும் இருக்கும். மற்ற ஆசிய, அய்ரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது, இந்தியாவே இளைய நாடாக இருக்கும். இன்றைய இந்திய, தமிழக இளைஞர்கள் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஏழரை லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடிக்கின்றனர். இவர்களில் படித்து முடித்து ஓராண்டு வரை வேலை கிடைக்காதவர்கள் 40% பேர். இரண்டு ஆண்டுகள் வரை வேலை கிடைக்காதவர்கள் 22% பேர். தமிழ்நாட்டில் உள்ள 454 பொறியியல் கல்லூரிகளில் 1.92 லட்சம் மாணவர்கள் வரை படிக்கும் கொள்ளளவு உள்ளது. தமிழ்நாட்டில் 31.03.2014 அன்று உயிர்ப்புடன் உள்ள வேலை நாடுவோர் காத்திருப்புப் பட்டியலில் 84,78,948 பேர் உள்ளனர். 2013 - 2014ல் வேலைக்காக பதிவு செய்தவர்கள் 15,23,820 பேர். 2013 - 2014ல் அரசின் வழிகாட்டுதலுடன் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை பெற்றவர்கள் 36.396 பேர். ஜெயலலிதா, 2023க்கான தொலைநோக்குத் திட்டம் முன்வைக்கும்போது, 11 வருடங்களில் 2 கோடி பேருக்கு பயிற்சி தரப்பட்டு வேலை பெறும் திறன் பெறுவார்கள் என்றார்.பகுதி திறன் பெற்றோர், 1.20 கோடி முதல் 1.30 கோடி பேர் வரை இருப்பார்கள் என்றார்.முழுதிறன் கொண்டோர் 66 லட்சம் முதல் 78 லட்சம் பேர் இருப்பார்கள்.(சராசரியாக ஒரு வருடத்தில் சுமார் 18 லட்சம் பேர் பயிற்சி பெற்று திறன் பெற்று வேலையில அமரும் தகுதியுடன் இருப்பார்கள் என்கிறது விஷன் 2023). அறிவிப்பும் யதார்த்தமும் தமிழகத்தின் மாண்புமிகு அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மேசைகளைத் தட்டித் தீர்க்க, விதி 110ன் கீழ், ஜெயலலிதா, அம்மா திறன் வளர்ப்பு வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிவித்தார். திட்டம் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள பொறியியல் பட்டமும், பட்டயமும் பெற்றவர்களுக்குப் பொருந்தும். பெண்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. தனியார் நிறுவனங்களில் 25,000 பேருக்கு 6 மாதங்கள் பயிற்சி தரப்படும். பயிற்சியின்போது அவர்களுக்கு மாதம் ரூ.5,000 தரப்படும். பயிற்சி தரும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு மாதம் ரூ.2,000 தரும். (குறைந்த கூலியில் வேலை வாங்கிக் கொள்ளும் முதலாளிக்கு அரசு மானியம் தரும்). மாதம் ரூ.2,000, 6 மாதங்கள், 25,000 பேருக்கு எனக் கணக்கிட்டால், அரசு, முதலாளிகள் கரும்புத் தின்னத் தரும் கூலி ரூ.30 கோடி. 6 மாதங்களுக்குப் பிறகு மாதம் ரூ.5,000 சம்பளத்தில் தொடர்வதா, அல்லது குறைந்த பட்சச் சம்பளம் தருவதா என்று முதலாளிகள் முடிவு செய்வார்கள். தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை பற்றிய அறிவிப்பு வந்தது. மாதம் ரூ.7,500 வீதம் 10,500 இளைஞர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இந்த வேலையில் இருந்து இதுவரை, 2,500 பேர் வெளியேறிவிட்டனர். 25,000 + 10,500 + 36,396 எனப் பார்க்கும் போது, எல்லாம் சேர்த்து 71,896 பேருக்கு வேலை. விஷன் 2023 சொல்வதோ ஆண்டுக்கு 18 லட்சம்! தமிழ்நாட்டில் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகைத் தரப்படுகிறது. பள்ளி இறுதி வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.100. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150.மேல்நிலைப் பள்ளிப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ.200. பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ.300. 2013 - 2014ல் 1,00,870 பேர் ரூ.24 கோடி உதவித் தொகை பெற்றனர். (இந்த மாபெரும் தொகையைப் பெற இரண்டு ஆண்டுகள் வேலை கிடைக்காமல் இருந்திருக்க வேண்டும்!) 84,78,948 பேரில் 1,00,870 பேருக்கு உதவித் தொகை தரப்பட்டுள்ளது! அதற்கு ரூ.24 கோடி.6 மாதங்கள், 25,000 பேரிடம் வேலை வாங்கிக் கொள்ளும் தனியார் முதலாளிகளுக்கு அள்ளித் தரப்படும் தொகையோ ரூ.30 கோடி. நகரங்கள் உபரி மக்கள் வீசியெறியப்படும் குப்பைத் தொட்டிகள் ஆவது ஏன்? தமிழக கிராமப்புறங்களும் விவசாயமும் அழிகின்றன. விவசாயத்திற்கான உள்கட்டுமான வசதிகளைப் பெருக்க எந்த அக்கறையான முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை. இந்தியாவில், தமிழ்நாட்டின் நிலப்பரப்பு 4%. நீர்வள ஆதாரங்கள் 3%. ஆனால், இந்தியாவில், தமிழ்நாட்டு மக்கள் தொகை 6%. அதாவது 7.21 கோடி. 2020க்குள் அரிசி தேவையை நிறைவு செய்ய சாகுபடிக்குக் கூடுதலாக 7 லட்சம் ஹெக்டேர் நிலம் தேவை எனத் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழக ஆய்வு சொல்கிறது. ஆனால், 1971 முதல் 2006 வரை, 6 லட்சம் ஹெக்டேர் நிலம் சாகுபடியில் இருந்து வெளியேறிவிட்டது. 2006 முதல் கணக்குப் பார்த்தால் சாகுபடி நில அளவு இன்னும் சுருங்கும். மீத்தேன், அனல்மின் நிலையங்கள் விட்டுவைத்ததை நிலவர்த்தகம் விழுங்காமல் விட்டுவிடுமா? கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் என நகர்மயமாதலும் தொழில்மயமாதலும் பாய்ச்சலில் முன்னேறு கின்றன. இடுபொருட்கள் விலை உயர்வு, கட்டுப்படியாகாத கொள்முதல் விலை என அடிமேல் அடி.தேவைப்படும் நேரத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதும் குதிரைக் கொம்பு. விவசாயக் கூலியும் சொற்பத் தொகையே. விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தமிழக அரசு 2009ல் அறிவித்த குறைந்தபட்சக் கூலி நாளொன்றுக்கு ரூ.100. 2015ல் உயர்த்தப்பட்ட நாள் கூலி ரூ.146. நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து, கிராமப்புற வறுமை, வேலையின்மையின் தீவிரத்தை, சிறிது தணித்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நாசமாக்குகிறது. அதற்கு தமிழக அரசும் துணை போகிறது. கிராமம் வெளியே தள்ளுகிறது. நகரங்கள் கவுரவமான உற்பத்தித் துறை, சேவைத் துறை வேலைகளைச் சுலபமாகத் தந்து இழுத்துக் கொள்வதில்லை. டமநஏக்கு ஏற்ற டமகக இல்லை.கிடைத்தால் அது, குறைகூலி, தொடர்ச்சியற்ற, பாதுகாப்பற்ற, நிரந்தரமற்ற வேலையே.இல்லாவிடில் வேலையின்மை. பிரம்மாண்டமான எண்ணிக்கையில், முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபடுத்த முடியாத சேமப் பட்டாளம் (தஉநஉதயஉ அதஙவ) பெருகுகிறது. இது உபரி மக்கள் தொகையாகவும் மாறுகிறது. மொத்தத்தில், வேலையில்லாதோர் பெரும்பட்டாளத்தால் வேலை கிடைப்போரின் கூலி சரிந்து வீழ்கிறது. திருபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை ஒரகடம் சுங்குவார்சத்திரம் மண்ணூர் கூட்டு ரோடு தொழில் பகுதிகளில் என்னதான் நடக்கிறது? இந்தப் பகுதியில் ஹுண்டாய், செயின்ட் கோபேய்ன், ரெனோ நிசான், சாம்சங், டெல், பிரிட்ஜ்ஸ்டோன் போன்ற பன்னாட்டு நிறுவ னங்களும் அப்போலோ, ஜேகே டயர்ஸ்,     கார்ப ரண்டம், ஏசியன் பெயின்ட்ஸ், டெல்ஃபி டிவிஎஸ், இந்துஜா போன்ற இந்திய ஏகபோக நிறுவனங்களும் உள்ளன. நோக்கியா, பாக்ஸ்கான், பிஒய்டி நிறுவனங்கள் நடையைக் கட்டிவிட்டன. ஹுண்டாய் நமக்கு விசயங்களை விளக்கும். அனைத்து வகையான வேலை செய்பவர்களும், வெண்டார்களும், வருகையாளர்களும் சேர்ந்து ஹுண்டாய் உணவகத்தில் ஒரு நாளில் 22,000 பேர் சாப்பிடுகின்றனர். இதன் துணை யூனிட்டுகளோடு சேர்த்துப் பார்த்தால், இதுவே ஒரு தனி உலகம். இங்கு ஒரு மாதத்தில் 50,000 கார்கள் தயாராகின்றன. சராசரியாய் ஒரு கார் விலை ரூ.6 லட்சம் எனக் கொண்டால், அவற்றின் விற்பனை மதிப்பு ரூ.3,000 கோடி. இவற்றைத் தயாரிக்கும் மனிதர்களின் கதை எத்தகையது? நிரந்தரத் தொழிலாளி வகையில் 1,377 சீனியர் டெக்னிசியன்கள் மாதம் சுமார் ரூ.40,000  ஊதியம் பெறுகின்றனர். 928 ஜுனியர் டெக்னிசியன்கள் மாதம் சுமார் ரூ.26,000 ஊதியம் பெறுகின்றனர். 1,377 x 40,000 = 5,50,80,000 928 x 26,000 = 2,41,48,000 இரண்டும் சேர்த்து ரூ.7,92,28,000. (அ) டிப்ளமா ட்ரெய்னி 1,186 பேர் உள்ளனர். மாதச் சம்பளம் ரூ.11,000. இவர்கள் பெறும் மொத்தத் தொகை ரூ.1,30,46,000. (ஆ 1). அய்டிஅய் ட்ரெய்னி 426 பேர் உள்ளனர். மாதச் சம்பளம் ரூ.9,000. இவர்கள் பெறும் மொத்தத் தொகை ரூ.38,34,000. (ஆ 2). ஜெனரல் அப்ரன்டீஸ் 1975 பேர் உள்ளனர். இவர்களில் டிப்ளமா முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9,000, அய்டிஅய் முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8,000 தரப்படுகிறது. வசதி கருதி, அதிகபட்ச தொகையாக கணக்கிட்டால், இந்த 1975 பேர் பெறுவது 1975 ல 9,000 = ரூ.1,77,75,000. (ஆ 3). ஆ 1 + ஆ 2 + ஆ 3 = ரூ.3,46,55,000 (ஆ). ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 6,000 பேர் உள்ளனர். இவர்கள் மாதம் ரூ.10,000 முதல் ரூ.11,000 வரை சம்பளம் பெறுகின்றனர். 6000 x 11,000 = ரூ.6,60,00,000. (இ). (தொழிலாளர் எண்ணிக்கை, சம்பளம் போன்ற விவரங்கள், தொழிலாளர்களிடம் வாய் மொழியாக விசாரித்து அறிந்துகொண்டவை). அ, ஆ, இ என்ற மூன்று வகை தொழிலாளர்களின் மாதச் சம்பளம் ரூ.7,92,28,000 + ரூ.3,46,55,000 + ரூ.6,60,00,000 = ரூ.17,98,83,000. ரூ.17 கோடியே 98 லட்சத்து 83 ஆயிரம். இது மாத விற்பனை மதிப்பில் 0.6%அய் விடக் குறைவு. பிரிவு (ஆ) பயிற்சித் தொழிலாளர்கள், பிரிவு (இ) ஒப்பந்தத் தொழிலாளர்களை சேர்த்தால் வரும் எண்ணிக்கை 1,186 + 426 + 1975 + 6,000 = 9,587. சமவேலைக்கு சமக்கூலி கோட்பாடு அமலாகி, இவர்கள் ஒவ்வொருவரும் மாதம் ரூ.20,000 கூடுதலாகப் பெற்றால் வரும் தொகை ரூ.19,17,40,000. இதனுடன் நிரந்தரத் தொழிலாளி பெறும் ரூ.7,92,28,000 சேர்த்தால் அதன் பிறகு வரும் தொகை ரூ.27,09,68,000. இந்தத் தொகையுடன் பிரிவு (ஆ) பயிற்சித் தொழிலாளர்கள், பிரிவு (இ) ஒப்பந்தத்   தொழிலாளர்கள் ஏற்கனவே பெறும் ரூ.10,06,55,000  சேர்த்தால் வரும் தொகை ரூ.37,16,23,000. இந்தத் தொகையைத் தந்தாலும் இது, மாத விற்பனை மதிப்பில் 1.25%க்குள்தான் வரும். தங்கம் வெட்டும் தொழிலாளிக்கு அவர் வெட்டிய தங்கம் கிடைப்பதில்லை.விலை உயர்ந்த பட்டை நெய்யும் தொழிலாளிக்கு பட்டுத் துணி கிடைப்பதில்லை. அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டும் தொழிலாளிக்கு அங்கு இடம் இருக்காது. மாறாக, சில செப்புக் காசுகள், கந்தல் துணிகள், நிலவறையின் மூலையில் ஓர் இடம்தான் கிடைக்கிறது என பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்ஸ் எழுதினார். இருபத்தியோராம் நூற்றாண்டின் பயிற்சியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வண்ணவண்ணக் கனவுகளுடன் வேலையில் சேர்கிறார்கள். பயிற்சியாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரப்படுத்தப்படுவதில்லை. நிரந்தரத் துன்பம் மட்டும் அனுபவிக்கிறார்கள். (ஹுண் டாயில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பயிற்சி யாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும்  வெளியேற்றப்பட்டுள்ளனர்). எந்தத் தனிவெளியும் இன்றி 5 பேர், 6 பேர், சில நேரங்களில் 10 பேர் சேர்ந்து தங்கி சாப்பிடுகிறார்கள்.அறை வாடகை உயர்ந்து கொண்டே போகிறது. தரமான நல்ல உணவு கிடையாது.உடல்நலம் இல்லாதபோது நெருங்கியவர்கள் அண்மையும் ஆதரவும் கிடையாது.பருவத்தில் திருமணம் செய்ய முடியாது.வெந்ததைத் தின்று துன்பத்தில் வாடி, முடிந்த அளவு பணம் மிச்சம் செய்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள். ஹுண்டாயின் நிரந்தரத் தொழிலாளர்கள், இந்த முறை கணிசமான சம்பள உயர்வு பெற வேண்டும், பிஎம்டபிள்யு ஒப்பந்தத்தை அளவு கோலாகக் கொண்டு நகர வேண்டும், வேலை இழந்தவர்களை வேலைக்கு எடுக்க வைக்க வேண்டும் என்ற நியாயமான விருப்பங்கள் கொண்டுள்ளனர். கூடவே, பயிற்சித் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் சமவேலைக்கு சமஊதியம், பணி நிரந்தரம் கோரினால், ஹ÷ண்டாய் நிறுவனத்துக்கு அதை வழங்கும் ஆற்றல் உண்டு. வானம் இடிந்து விழுந்துவிடாது. ஹுண்டாய் தொழிலாளர்கள் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள். மோடி அரசும் பயிற்சியாளர் ஒப்பந்த முறையும் மோடி நல்ல நாட்கள் தருவார் என்று தொழிலாளர்கள் நிச்சயம் எதிர்ப்பார்க்க முடியாது. இந்தியாவின் மலிவான உழைப்பைப் பயன்படுத்த வாருங்கள் என்று, அவர், வெளி நாட்டு முதலீட்டாளர்களிடம் பகிரங்கமாக இந்திய இளைஞர்களின் உழைப்புச் சக்தியை   கூவி விற்கிறார். மோடி அரசாங்கம் நிரந்தர வேலை வாய்ப்புக்களை ஒழித்துக்கட்ட, தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய, பயிற்சியாளர் முறையை ஒப்பந்த முறையை பரவலாக்க  விரிவாக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்கிறது. பயிற்சியாளர்கள் சட்டம் 1961க்கு என்ன திருத்தங்கள் தரலாம் என மோடியின் இரண்டு அமைச்சரவைக் கூட்டங்கள் சில பரிந்துரைகள் தந்துள்ளன.              இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் பயிற்சியாளர்களாக்கலாம்.              பொறியியல் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கலை அறிவியல் பட்டதாரிகளையும் பயிற்சியாளர்கள் ஆக்கலாம்.              பயிற்சி காலத்தை மூன்று ஆண்டுகளில் இருந்து அய்ந்து ஆண்டுகளாக உயர்த்தலாம்.              பகுதி திறன் பெற்ற தொழிலாளர்கள் குறைந்தபட்ச சம்பளத்தில் 70% முதல் 90% வரை உதவித் தொகை தரலாம்.              ஆண்டு விற்று முதல் ரூ.100 கோடிக்குக் கீழ் உள்ள முதலாளிகளுக்கு முதல் வருட பயிற்சியாளர் உதவித் தொகையை அரசே வழங்கலாம்.              வேலை வாய்ப்பு இருப்பதை உறுதி செய்ய, தொழிலாளர்களை நிரந்தரம் செய்யுமாறு முதலாளிகளை நிர்ப்பந்திக்க வேண்டாம்.              மோடி அரசு வேலை வாய்ப்பைப் பெருக்க கோடிக்கணக்கில் பயிற்சியாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? செயல்படாத அரசு, செயல்படாத முதலமைச்சர் என்ற வாதங்கள், முழு சித்திரத்தை, நிஜமான சித்திரத்தைத் தரவில்லை. மக்கள் கோரிக்கைகள், பிரச்சனைகளில் அரசு        எப்போதும்போல் குற்றமய அலட்சியத்துடன் செயல்படாமல் இருக்கிறது. பால் ஊழல் ரமணா பதவியைப் பறித்தது.அடுத்த ஊழலில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கதை முடிந்தது.வெளியில் தெரிந்து நாறினால் கல்தா. மற்றபடி, அரசின் அமைச்சர் பெருமக்களின் ஊழலில், இந்த அரசு செயல்படும் அரசாகவே உள்ளது. நாடாளுமன்றத்தில் அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிலம் கையகப்படுத்தும் விவசாயிகள் விரோத மசோதாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். மக்களின் முதல்வர் ரயில்வே மற்றும் பொது நிதிநிலை அறிக்கைகளை வரவேற்கிறார். அருண் ஜெட்லி அம்மையாரை நேரில் சந்திக்கிறார்.நரேந்திர மோடி, அவருடைய பரபரப்பான வெளிநாட்டு பயணங்கள் மத்தியிலும் பிப்ரவரி 24 அன்று அம்மையாரின் 67ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.(மேற்கூறிய நிகழ்வு களுக்கும் சொத்துக் குவிப்பு வழக்குக்கும் வாசகர்கள் முடிச்சு போட்டால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது). தமிழ்நாட்டில் மே மாதம் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்கவுள்ளது. அந்த மாநாட்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். சிறகுகளுடன் பறக்கும் குதிரை மாநாட்டுச் சின்னமாக்கப்பட்டுள்ளது. (இறக்கைக் கட்டிப் பறந்துவிட்ட நோக்கியா, பாக்ஸ்கான், பிஒய்டி நிறுவனங்கள் நினைவுக்கு வருகின்றனவா?) பன்னீர்செல்வம் பாட்டுக்கு, தொழில் அமைச்சர் தங்கமணியும் தொழிலாளர் அமைச்சர் மோகனும் பக்கவாத்தியம் வாசித்து உள்ளனர். தங்கமணி தமிழ்நாட்டின் நல்ல விற்பனை பிரதிநிதியாகி, தமிழ்நாடு முதலீட்டாளர்களின் சொர்க்கம் என்கிறார். (நாணயத்தின் மறுபக்கம் தொழிலாளர்களுக்கு நரகம் என்றாகாதா?) தமிழ் நாட்டில் ஒரு நிமிடத்திற்கு ஒரு கார், 92 விநாடி களுக்கு ஒரு வர்த்தக வாகனம் தயாராகிறது என்கிறார். (தமிழக உழைக்கும் மக்கள் ஒரு நாளில் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றி மாண்புமிகுக்களுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்?). தொழிலாளர் அமைச்சர் மோகன் என்ன செய்தார்? 10.08.2012 அன்று அரசாணை எண் 256 மூலம் தமிழக அரசு தானுந்து உற்பத்தித் தொழிலை (ஆட்டோமொபைல் மேனுபேக்டரிங் தொழிலை) பொது பயன்பாட்டு சேவை என அறிவித்தது.ஹ÷ண்டாயுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்தை பொது பயன்பாட்டு சேவையாக அறிவிப்பதாக தான் ஒப்புக்கொண்டுள்ளதாகச் சொன்னது. 6 மாதங்களுக்குப் பிறகு அந்த ஆணை   நீட்டிக்கப்படவில்லை. சட்டப்படி, ஒரு நிறுவனத்தை பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்க முடியாது; ஒரு தொழிலைத்தான் அறிவிக்க முடியும். பொது பயன்பாட்டு சேவையில் சட்ட பூர்வமாக வேலை நிறுத்தம் சாத்தியம் இல்லை. பொது அவசரமோ, பொது நலனோ இருந்தால் மட்டுமே ஒரு தொழிலை பொது பயன்பாட்டு சேவை என அறிவிக்க முடியும்.   ஆட்டோமொபைல் உற்பத்தித் தொழிலில் 10.08.2012 தேதிய அரசாணை போடப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு, அந்தத் தொழிலை பொது பயன்பாட்டு சேவை என அறிவிக்க, பொது நலன் பொது அவசரம் இருந்ததாகத் தமிழக அரசே கருதாததால்தான் அந்த ஆணையின் காலம் நீட்டிக்கப் படவில்லை. இப்போது ரகசியமாக, அவசர அவசரமாக 03.12.2014 அன்று தமிழக அரசு அரசாணைகள் 144 மற்றும் 331 மூலம் ஆட்டோ காம்பனன்ட்ஸ் மேனுபேக்சரிங் இன்டஸ்ட்ரீசை பொது பயன்பாட்டு சேவை ஆக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை 24.12.2014 அன்று வெளியிட்டது. மக்களின் முதல்வர் ஆலோசனைப்படி, தொழிலாளர்கள் மேல் போர் தொடுக்க பொது பயன்பாட்டு சேவை அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் என்று     அஇஅதிமுககாரர்கள் எங்கும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கத் தயாரில்லை. இது, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு தந்துள்ள சமிக்ஞை. நாங்கள் முதலாளிகள் பக்கம்தான் என்பதை இதன் மூலம் உறுதி செய்துள்ளனர். 1947 முதல் 2015 வரை இல்லாத பொது நலன் பொது அவசரம் இப்போது வந்துவிட்டது! எம்ஆர்எஃப், டிவிஎஸ், டைமன்ட் செயின், பிரிக்கால், ஹுண்டாய், அதன் துணை   நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் வேலை செய்கிற சில லட்சம் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை சட்ட விரோதமாகவும் அநியாயமாகவும் பறிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக, மத வாத சாதிய ஆணாதிக்க சக்திகளுக்கு ஆதரவாக, ஊழலுக்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட மார்ச் 23 அன்று திருபெரும்புதூரில் தமிழக இளைஞர்களும் தொழிலாளர்களும் உறுதியேற்பு மார்ச் 23 1931 அன்று, பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தூக்கில் போடப்பட்டார்கள். அவர்கள், காந்தி யிடம், காங்கிரசிடம், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, அது முதலாளிகளுடைய, நிலப்பிரபுக்களுடைய நாடாக இருக்கக் கூடாது, வெள்ளை எசமானர்களுக்குப் பதில் பழுப்பு நிற எசமானர்களிடம் அதிகாரம் மாறி என்ன பயன் என்று  கேள்வி எழுப்பி விவாதித்தார்கள். 2015 மார்ச் 23லும், இந்த நாடு பண மூட்டைகளுக்கு முதலாளிகளுக்கு ஊழல் அரசியல்வாதிகளுக்கு சாதிமத சக்திகளுக்குச் சொந்தமானதல்ல, தொழிலாளர்களுக்கு இளைஞர்களுக்கு மக்களுக்குச் சொந்தமானது என முழங்க வேண்டிய சூழலே நிலவுகிறது. நாயை, பன்றியை இழுப்பதுபோல, தொழிலாளியை, தரதரவென இழுத்த என்விஎச் கொரிய முதலாளி கைது செய்யப்படவில்லை. ஆனால், அவரது தொழிற்சாலையும் அவரது சக முதலாளிகளின் தொழிற்சாலைகளும் பொது பயன்பாட்டு சேவை, அங்கு வேலை நிறுத்தங்கள் கூடாது என்கிறது தமிழக அரசு. புரட்சிகர இளைஞர் கழகம், மார்ச் 23 அன்று திருபெரும்புதூரில், கொத்தடிமைக் கூடாரங்களைத் தகர்த்திட அறைகூவல் விடுத்து நடத்தும் பொதுக் கூட்டத்தில், இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா கலந்துகொள்கிறார். பகத்சிங்கின் வாரிசுகளே, தோழர்களே, மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு சவால்விட மார்ச் 23 அன்று திருபெரும்புதூரில் அணிதிரள்வோம்.

...Full Text

டிசம்பர் 18 தோழர் வினோத் மிஸ்ரா நினைவு தின நிகழ்ச்சிகள்

டிசம்பர் 18 அன்று தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் நிகழ்ச்சி, செங்குன்றத்தில் நடைபெற்றது. பாட்டாளி வர்க்கப் பேராசான்கள், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் படங்கள் கூட்டம் நட்நத இடத்தை அலங்கரித்தன. கூட்டத்திற்கு மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் எஸ்.மணி தலைமையேற்றார். தோழர்கள் எம்.திருநாவுக்கரசு, மலைராஜ், ஜி.அன்புராஜ், வி.சீதா ஆகியோர் உரையாற்றினார்கள். 100 தோழர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவிதொச மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் க.ராமன் சிறப்புரையாற்றினர். மோடி அரசின் கார்ப்பரேட் மதவெறி பாசிச முயற்சிகளை முறியடிக்க, இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை பலப்படுத்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியாக கூட்டம் அமைந்தது. எரிவாயு மானியத்திற்காக, ஆதார் அட்டைக்காக, வங்கி கணக்குத் துவங்க மக்களை அலைக்கழிக்கும் மத்திய, மாநில அரசுகளின் போக்கை கண்டித்தும், ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும், தேசிய ஊரக வேலைத் திட்டத்தை சீர்குலைப்பதை கண்டித்தும், பால் விலை உயர்வை, மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும், 110ஆவது விதிப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னவாயிற்று என்று கேட்டும், பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தோழர்கள் பேசினார்கள். மக்கள் நலனே கட்சியின் நலன் என்ற தோழர் சாரு மஜ÷ம்தாரின் முழக்கத்தை முன்வைத்து, ‘இந்தியா என் கனவுகளில்’ கட்டுரையில் தோழர் வினோத் மிஸ்ரா சொன்ன விசயங்களை முன்வைத்து, எம்எல் கட்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை கட்டமைக்க தோழர் கவ்னர் தலைமையில் முன்னணித் தலைவர்கள் செயல்பட்டனர். சென்னையில் அம்பத்தூர், அயனாவரம், திருபெரும்புதூர் அலுவலகங்களில் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டங்களில் கட்சி வலுப்படுத்தும் இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி மாநில கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் சேகர், ஜவகர், இரணியப்பன் பங்கேற்றனர். சேலத்தில் கட்சி கிளை பொதுப்பேரவைகள் நடைபெற்றன. புதுக்கோட்டையில் சங்கம் விடுதியில் கட்சி உள்ளூர் கமிட்டி மாநாடு நடைபெற்றது. தீப்பொறி சந்தா, லெவி, கட்சி நிதி உள்ளிட்ட அனைத்து பாக்கிகளும் கடமைகளும் இக்கமிட்டி முன்மாதிரியாக நிறைவு செய்தது. கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசைதம்பி சிறப்புரையாற்றினார். விழுப்புரம் புதுவையில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம், புதுவை செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் உரையாற்றினார்கள். கோவையில் டாஸ்மாக் சாராயக் கடையை மூட வலியுறுத்தி இயக்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் கமிட்டி ஊழியர் கூட்டங்கள் நடைபெற்றன. கன்னியாகுமரியிலும், நெல்லையிலும் கிளைக் கூட்டங்கள் நடைபெற்றன.

...Full Text

பாசிசம்: சம காலப் புரிதலும் சவால்களும்

ஒவ்வொன்றும் ஒரு விதம் பாசிசம் நாசிசம் என்ற சொற்கள் 1930 களில் 1940களில்தான் உலகிற்கு அறிமுகமாயின. மார்க்சிய - லெனினியம், மூர்க்கமாக முன்னேறும் ஏகாதிபத்தியத்தோடு தொடர்புப் படுத்தியே, அன்று பாசிசத்தை விவரித்தது. மார்க்சிய -லெனினியம், உயிரற்ற மூடுண்டு போன விஷயம் அல்ல; அது ஒரு வற்றாத ஜீவ ஊற்று. 1930 - 1940 காலத்தோடு, சமூக வாழ்வும் வரலாறும் உறைந்து நின்றுவிடவில்லை. ஜெர்மனி - ஹிட்லர், இத்தாலி - பெனிட்டோ முசோலினி ஜோடிகளுடன் ஆசியாவின் ஜப்பானும் பாசிஸ்ட்களாக அடையாளம் காணப்பட்டனர். அவையும் ஒரே சீரான தன்மைகள கொண்டவை அல்ல. அந்தக் காலத்திலேயே, ஸ்பெயினில் பிரான்சிஸ்கோ பிராங்கோ, போர்ச் சுகல்லில் அந்தோனியோ டி ஒலிவெய்ரோ சலேசார், ஹங்கேரியில் மிக்கோலஸ் ஹோர்சி, ருமேனியாவில் அயன் அன்டலோஸ்கு என்ற பாசிச சர்வாதிகாரிகளும் இருந்தனர். பின்னர், கீழை நாடுகளிலும், ஆசிய, தென்அமெரிக்க நாடுகளிலும் பாசிஸ்ட் ஆட்சிகள் இருந்துள்ளன. இந்தோனேஷியா சிலி ஆகிய நாடுகளை அடையாளப்படுத்த முடியும். அவசர நிலைப் பிரகடன கால இந்திரா ஆட்சி, சிறீலங்காவின் ராஜபக்சே ஆட்சி ஆகியவற்றையும் பாசிஸ்ட் ஆட்சிகளாகக் காட்டமுடியும். இப்போதைய சங் பரிவாரின் அங்கமான பாஜகவின் நரேந்திர மோடியின் ஆட்சியை, பெருந்தொழில்குழும மதவெறி (கார்ப்பரேட் கம்யூனல்) பாசிஸ்ட் ஆட்சி என அழைக்கலாம்.

வேறுபாடுகள் தாண்டிய அடிப்படையான ஒற்றுமை

சுவையான ஒரு முரணுடன் (துணைத் தலைப்புடன்) துவங்கலாம்.வேற்றுமைகளில் ஒற்றுமையை நிராகரிப்பது, பாசிஸ்ட்களின் பொதுப் பண்பு. பாசிஸ்ட்களும் கூட,         முதலாளித்துவ அமைப்புபற்றி அதில் உள்ள ஊழல் போன்ற விஷயங்கள் பற்றி காரசாரமாக விமர்சிப்பது, தேச மக்களின் வளமான வருங்காலம் பற்றிப் பேசுவது போன்றவற்றைச் செய்வார்கள். ஹிட்லரின் கட்சியின் பெயரில், ‘தேசிய’‘சோசலிஸ்ட்’ என்ற சொற்கள்      இருந்தன. ஆனபோதும், சாராம்சத்தில், பாசிச ஆட்சிகள் அனைத்துமே, தனிச் சொத்தின் பாதுகாவலர்களே. வருமானங்கள் மற்றும் செல்வங்களை, ஆகக் குறைவான சிலர் கைகளில் குவிக்கும், ஏகப்பெரும்பான்மை மக்களிடம் இருந்து பறிக்கும், சமூக அமைப்பிற்கு பொருளாதாரத்திற்கு, அரசியல்ரீதியாகத் தலைமை தாங்குவார்கள். அடிப்படை ஒற்றுமை, இந்த படுமோசமான, பாரதூரமான பொருளாதார மறுவிநியோகத்துடன் தொடர்புடையதாகும். நாட்டுப்பற்று தேசியம் தேச நலன் தேசப் பெருமிதம் தேசப் பாரம்பரியம் எனக் கொடி பிடிப்பார்கள். இன நிற மொழி சாதி மத அடிப்படைகளிலான ஆதிக்க வாதத்தை (சாவுனிசம் - டாமினேஷன்), ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற சமன்பாட்டைக் கட்டமைத்து, சமூகப் பதட் டத்தை சமூகப் பிளவுகளை உருவாக்குவார்கள்; அவற்றின் துணை கொண்டு, அவற்றின் மீது நின்று கொண்டு, ஒரு வலுக்கட்டாயமான ஒழுங்கை ஒற்றுமையைத் திணிப்பார்கள். துப்பாக்கி தடி கொண்டு என்று மட்டுமல்லாமல், சமூகத்தின் சிந்தனையின் மீது மேலாதிக்கத்தை தற்காலிகமாக வென்று நிறுவவும் செய்வார்கள். ஆனால், வெவ்வேறு நாடுகளின் வெவ்வேறு வரலாற்றுக் கட்டங்களின் தன்மைகளை, கூறுகளைப் பெறுகிற பாசிசம், முதலாளித்துவ நெருக்கடி முற்றும் போது, நெருக்கடியிலிருந்து மீளும் முயற்சியில, ஆளும் வர்க்கங்களின் ஆகப் பிற்போக்கான பிரிவினர் உந்தித் தள்ளும் அரசியல் பதில்வினையாகவே, எப்போதும் இருந்துள்ளது. பாசிசத்திற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் தேர்தல்களுக்கும் தொடர் பில்லை எனக் கருதுவது, அரசியல்         அறியாமையே. (நாடாளுமன்ற ஜனநாயகமே, ஏகப் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வாக்குகளுடன், முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிற, முதலாளித்துவ சர்வாதிகாரம்தான்). 534 நாடாளுமன்ற இடங்களில் 282 இடங்களை வென்றும் கூட பாசிசம் ஆட்சிக்கு வரும். சமகால உலகில், அய்க்கிய அமெரிக்கா தலைமை தாங்கும் ஒரு ‘சர்வதேச அளவிலான பயங்கரவாத எதிர்ப்புப் போர்’ நீடிக்கும்  போது, வன்மையான அரசு கடுமையான சட்டங்கள் (ஏஅதஈ நபஅபஉ ஏஅதநஏ கஅரந) அடிப்படையிலேயே ‘ஜனநாயக ஆட்சிகள்’ நடை பெறும்; அங்கு பாசிசக் கூறுகளின் ‘அளவு’ மாற்றம், ஒரு கட்டத்தில், முழுமையான பாசிச அரசு என்ற ‘பண்பு’ மாற்றமாக மாறும். அளவு மாற்றம் பண்பு மாற்றமாகிறது என்பது சரியே என்றாலும், இந்தப் புதிய பிரும்மாண்டமான ‘அளவும்’, இந்தப் புதிய ‘பண்பும்’ கூட, சமூகம் இதுவரை சந்தித்திராத கொடூரங்களை அரங்கேற்றும் என்பதும், அவற்றை எதிர் கொள்ள, வழக்கத்திற்கு மாறான பதில்வினைகள் தேவை என்பதும், கவனத்தில் கொள்ளத்தக்கவையாகும். தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு, சமூக ஊடகங்கள் பரந்து விரிந்துள்ள உலகில், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள் பழகிப் போயுள்ள உலகில், ஒரு முழு முற்றூடான பாசிச ஆட்சி, அப்படியே நீடிப்பதும் மிகவும் கடினமாகும். முதலாளித்துவ நெருக்கடி              கருவான முதலாளித்துவப் பொருளாதாரங்கள், மெதுவான வளர்ச்சி, அதிகரிக்கும் வேலை இன்மை, குறை வேலை வாய்ப்பு, வீணாக்கப்படும் உற்பத்தி ஆற்றல் ஆகியவற்றால் குறிக்கப்படும் நீண்ட கால தேக்கத்தைச் சந்திக்கின்றன. வளர்ச்சி விகிதம் என்பதில் ஒரு நீண்டகால சரிவுப் போக்கு தொடர்கிறது. வருமான மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு, மலைக்கும் மடுவுக்கும் இடையிலானதாக மாறிவிடுகிறது.              தேக்கமும் ஏற்றத்தாழ்வும் ஒன்றிலிருந்து ஒன்று உருவாகி ஒன்றை ஒன்று பலப்படுத்தவும் செய்கின்றன.              வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம், முதலாளித்துவப் பொருளாதாரத்தின், அசிங்கம் பிடித்த ரகசியங்களை வெளியே கொண்டு வந்துள்ளது. வருமான, செல்வ ஏற்றத் தாழ்வுகள் பாரதூரமாய் அதிகரிக்கின்றன என்ற விவரங்கள் இதற்கு முன்பும் கிடைத்தனதான் என்றபோதும், இப்போது 99% எதிர் 1% இயக்கத்திற்குப் பிறகு, அவை, போதுமான ஊடக, சமூக ஊடக கவனம் பெறுகின்றன. சில விவரங்கள்              எக்கனாமிக் பாலிசி இனிஷியேடிவ் - பொருளாதார கொள்கை முன்முயற்சி அமைப்பு 1979 முதல் 2013 வரை உற்பத்தித் திறன் உயர்வு 68.9% இருந்தும், தனியார் துறையின் 80% உற்பத்தித் தொழிலாளர்களின் வருமானம் 8% மட்டுமே உயர்ந்தது என்கிறது.              அய்க்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி.இதில் வயது வந்தோர் 26 கோடி.அவர்களில் 1% என்பது 26 லட்சம். 0.1% 2.6 லட்சம். 0.01% 26,000 பேர் ஆகும்.              13 கோடி பேரின் வருமானத்தை செல்வத்தை 400 பேர் வைத்துள்ளனர்.              1950 முதல் 1970ல் சமூகத்தின் கடைநிலை 90% சம்பாதிப்பவர்கள், 1 டாலர் கூடுதலாகச் சம்பாதித்தபோது, மேல் நிலை 0.01%, அதாவது சுமார் 14,000 குடும்பங்கள் 162 டாலர்கள் சம்பாதித்தனர். அதாவது 162 மடங்கு ஏற்றத்தாழ்வு. இதே ஏற்றத்தாழ்வு 1990 - 2002 காலகட்டத்தில் 18,000 மடங்கானது. அய்ரோப்பாவில் சில விளைவுகள் ஏற்றத்தாழ்வுகள், ஒட்டுமொத்த தேக்கத்தை ஆழப்படுத்தி தீவிரமடைய           வைத்துள்ளன.ஸ்பெயின் கிரீஸ் இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற அய்ரோப்பிய நாடுகளில் கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்கள், போர் எதிர்ப்பாளர்கள் பல லட்சங்களில் அணி திரள்கிறார்கள். அதே நேரம், கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஏன், நார்வே ஸ்வீடன் டென்மார்க் போன்ற நாடுகள் உட்பட, இசுலாமிய எதிர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு மனோ நிலை பரவி வருகிறது. அய்ரோப்பா நெடுக இசுலாமியப் பெண்கள் பொது வெளிகளில் பர்தா அணியக் கூடாது, மசூதிகளில் இருந்து வெளியில் கேட்குமாறு ஓதக் கூடாது என்ற நிர்ப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன. அதிகார பூர்வமாகி வருகின்றன. ஓரஞ்சாரம் விளிம்பு நிலை என்ற நிலை மாறி, பாசிஸ்ட்கள் நாஜிக்கள் என்ற அவப்பெயர்கள் தாண்டி, அவர்கள், அரசியல் மய்யத்திற்கு வந்துள்ளனர். ‘தேசிய வாதிகள், தேச பக்தர்கள்’ ஆகியுள்ளனர். முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில், கிறிஸ்துமஸ் பாடல்களை         பாடிக்கொண்டு, 17,000 பேர், ‘மேற்குலகம் இசுலாமியமயப்படுத்தப்படுவதற்கெதிரான அய்ரோப்பியர்கள்’ என்ற பதாகையின் கீழ் அணிதிரண்டனர். ‘அய்ரோப்பாவின் கிறிஸ்துவ கலாச்சாரம் மற்றும் மரபுகளின் வேர்கள் அரித்துப் போகவைக்கப்படுகின்றன; நாங்கள் நாஜிக்கள் அல்ல, தேச பக்தர்களே’ என்கிறார்கள். அய்ரோப்பாவிலேயே, வளர்ச்சியடைந்த ஒப்பீட்டுரீதியில் ஸ்திரமான பொருளாதாரம், ஜெர்மனியினுடையதாகும். நாஜிக்களின் வதை முகாம்கள் என்ற கொடூர வரலாற்றின் வடுக்கள் நிறைந்தது ஜெர்மனி. அந்த ஜெர்மனியின் பின் தங்கிய பகுதி, முன்னாள் கிழக்கு ஜெர்மனியாகும். இது முன்னாள் சோசலிச முகாமைச் சேர்ந்ததும் கூட. இங்குதான் விஷமெனப் பரவுகிறது மதவெறி. கூடவே‘தேசியம்’. ஆனால், ஜெர்மானிய சமூகத்தில், ‘பொருளாதாரம்’, நாஜி அரசியலை விமர்சனம் செய்கிறது. ஜெர்மன் பெடரேஷன் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான உல்ரிச் கிரில்லோ, ‘ஒரு வளமான நாடு என்ற விதத்திலும், சக மனிதர்களிடம் கிறிஸ்துவ அன்பு காட்டும் விதத்திலும், நம் நாடு கூடுதல் அகதிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார். அய்ரோப்பாவின் முதன்மை நிலையில் உள்ள பொருளாதாரம், போட்டியில் நிற்க, வெளி நாடுகளிலிருந்து வரும் அகதிகள் அவசியம் என, முதலாளித்துவ நலன்கள் நிர்ப்பந்திக்கின்றன. இந்தியாவில் பாசிசம்              இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்து ஒரு பாசிச ஆட்சியை நடத்தினார். விரைவில் ஒரு தேர்தல் நடத்தி தோற்றும் போனார். பாசிச ஆட்சி நீடிக்க முடியவில்லை.              சங் பரிவாரின் பாசிச ஆட்சி  திடீரென ஓரிரவில் தோன்றியதல்ல. பாரதிய ஜனதாவும் சங் பரிவாரும், அரசியல் தீண்டாமையிலிருந்து, ஜனதா காலத்திலேயே வெளியே வந்து விட்டார்கள்.              வாஜ்பாய் காலத்திலேயே, ஆகக் கூடுதல் கட்சிகள் கூட்டணியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. வேறு வேறு கட்டங்களில், வேறுவேறு சூழல்களில், ஆகக் குறைவான சில அரசியல் இயக்கங்கள் தாண்டி, பாரதிய ஜனதா கட்சியோடு பல கட்சிகளும் உறவாடி உள்ளன.              சர்ச்சிலுக்கு முன் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சேம்பர்லைன், ஹிட்லர், ஜான் கேட்டால் முழம் கொடுத்தார். காங்கிரசின் துவக்க காலத்திலிருந்தே, அது மென்மையான இந்துத்துவா கட்சியாகும். இந்திரா பிரதமராக இருந்தபோதே, அவரது ஆலோசனையின் பேரில் மத்தியபிரதேசம், ஒடிஷா மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் வந்தன. ராஜீவ் காலத்தில்தான், ஷிலன்யாஸ் பூஜைக்கென, மசூதியின் கதவுகள் திறக்கப்பட்டன.நரசிம்மராவ் அரசு வேடிக்கை பார்த்தபோதுதான் மசூதி இடிக்கப்பட்டது.              காங்கிரஸ் அரசுகள், மதவாதக் குற்றம் புரிந்த பால் தாக்கரே, நரேந்திர மோடி மீது எந்த குற்றவியல் நடவடிக்கைûயும் எடுக்கத் துணியவில்ûலை.              1999 முதல் 2004 வரை வாஜ்பாய் பதவியில் இருந்த காலத்திலிருந்து, 2014 துவங்கி உள்ள மோடி பதவிக்காலம் நிச்சயம் மாறுபட்டது. இந்தக் கட்டம் தோன்றுவதும், காங்கிரசின் வரலாற்றுச் சரிவு ஒரு பண்பு மாற்றத்தை அடைவதும், ஒரு சேர நடந்துள்ளன.              காங்கிரஸ், ஜனசங்கம்- பாஜக 1969 முதல் 2014 வரை நாடெங்கும் வென்றுள்ள சட்டமன்ற இடங்களிலிருந்து, சங் பரிவார் நாடெங்கும் பரவியுள்ளதையும் காங்கிரஸ் சரிந்துள்ளதையும், காண முடியும்.              நேரடி, முழுமுற்றூடான, பாசிச ஆட்சி இல்லாதபோதே, இந்திய பாதுகாப்பு விதிகள் (ஈஐத), எஸ்மா, மிசா, தேசிய பாதுகாப்பு சட்டம், தடா, பொடா, சட்டவிரோத        நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், நாடெங்கும் உள்ள நகரங்களில் 15.08.1947ல் இருந்தே அனுமதியின்றி கூட்டம் பேரணி நடத்த முடியாது என்பவையும் தொடர்வதில், சுலபமாக பாசிசக் கூறுகளைக் காண முடியும். பசுமை வேட்டை, போலி மோதல் படு கொலைகள், ஊரடங்கு உத்தரவு, கலவரப்பகுதி பிரகடனம் எப்போதும் இருப்பவை. கருத்துச் சுதந்திரப் பறிப்பும், ஆணாதிக்க சாதிய தார்மீக காவல் கண்காணிப்பும் தொடர்கதை என்பதிலும் பாசிசக் கூறுகளைக் காண முடியும்.              தமிழ்நாட்டில், தேவாரம் வெறியாட்டம், மதமாற்ற தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை, லட்சக்கணக்கான அரசு ஊழியர் ஆசிரியர் ஒரே நாளில் வேலை நீக்கம், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பை அந்நிய நாட்டு எதிரி மீதான போர் போல் கருதி ஒடுக்கியதும், பாசிச வெளிப்பாடுகளே ஆகும்.              இப்போதைய பெரும் தொழில் குழும மதவெறி பாசிச ஆட்சியில், முறைகள், அமைப்புக்கள், நிறுவனங்கள் (பெயரளவிலான வையாகவே இருந்தபோதும்) போன்றவை ஓரங்கட்டப்பட்டுவிட்டு, சர்வ வல்லமை வாய்ந்த ஆகத் திறன் வாய்ந்தவர் என மோடி என்ற தனிநபர் முன்நிறுத்தப்படுகிறார்.              இனியும் பாஜக ஓரஞ்சாரக் கட்சி அல்ல. அது ஒரு பிரதான நீரோட்டக் கட்சி ஆகும். இங்கிலாந்தின் பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்), அய்க்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி (ரிபப்ளிக்கன்), போன்றவை போல், பாஜகவும் பிரதான நீரோட்டக் கட்சி ஆவதில், வலதுசாரி திசையில் சமூகம் பயணம் செய்வது ஒரு முக்கியக் காரணமாகும்.              பொருளாதாரக் கொள்கைகளில் தேசிய பிராந்திய பிரதான நீரோட்டக் கட்சிகளின் கருத்தொற்றுமை, சிபிஅய் சிபிஎம் சரிவு, மாவோயிஸ்ட் தேக்கம், சிபிஅய்எம்எல்லின் மெதுவான மந்தமான வளர்ச்சி போன்றவற்றையும் கூட, பாசிச ஆட்சியின் உதயத்தின் பின்புலமாகக் காண முடியும். எதிர்காலம் இன்று, மூர்க்கமாக முரட்டுத்தனமாக முதலாளித்துவ லாபங்களைப் பெருக்கும்        நடவடிக்கைகளுக்கு பாஜக உதவுகிறது. அவசரச் சட்டங்கள் போடவும் தயங்கவில்லை. ஆகவே, ஆளும் வர்க்கங்கள் பாஜகவை விரும்புகின்றன.நாய் தான் தன் வாலை ஆட்ட முடியுமே தவிர, வால் நாயை ஆட்ட முடியாது. இந்தியப் பொருளாதாரம் வளரவில்லை என்றால், பாஜக ஆளும் வர்க்கங்களின் செல்லப் பிள்ளையாகத் தொடர முடியாது. பொதுவாக சாமான்ய மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களின் கீழ் மத்தியப் பிரிவினரின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை, மாறாக சரிகிறது என்ற நிலை நீடித்துத் தொடர்ந்தால், பாஜக ஆட்சி தொடர முடியாது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் தீர்வு பிறந்து, இந்தியப் பொருளாதாரம் பாய்ச்சலில் முன்னேற,  பேரதிசயங்கள் பொருளாதாரத்தில் நிகழ்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மக்களின் வாழ்வுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கம், அடிப்படையான அனைத்தும் தழுவிய சமூக மாற்றத்திற்கான இயக்கம், இந்திய மக்களின் போர்க்குணமிக்க போராட்ட ஒற்றுமை என்பவற்றில் மட்டுமே பாசிசத்திற்கெதிரான முறிவு மருந்து உள்ளது.

...Full Text

எது எனது வீடு?

‘மதம் கடவுள் அல்லது ஆயுதங்களின் மூலம் எதையும் கைப்பற்றும் எண்ணமோ அல்லது அடக்கியாளும் எண்ணமோ இந்துக்களுக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, பிற மதத்தினரை தங்களது மதத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமோ இருந்ததே கிடையாது. அடிப்படையில் இந்துக்களுக்கு மதமாற்றத்தில் நம்பிக்கையும் கிடையாது’.இந்துக்கள் பற்றி ஆர்எஸ்ஸின் எஸ்.குருமூர்த்தி இப்படிச் சொல்வது உண்மைதான். அவர்கள் தங்களது நாளொன்றை குறைந்தபட்ச கவுரத்துடன் கடத்தும் கவலையில் தள்ளப்பட்டுள்ளவர்கள். அது தொடர்பான நடவடிக்கைகளில்தான் அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள். இந்துத்துவ சக்திகளுக்கு, மதம் கடவுள் அல்லது ஆயுதங்களின் மூலம் எதையும் கைப்பற்றும் எண்ணமோ அல்லது அடக்கியாளும் எண்ணமோ இருந்ததில்லை, இருப்பதில்லை என்று அவரால் சொல்ல முடியாது. குஜராத் முதல் முசாபர்நகர் வரை இந்துத்துவ சக்திகளது அந்த பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. டில்லியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அந்த வழிமுறைகள் திட்டமிட்டு அமலாக்கப்படுகின்றன. ஆட்சியைப் பிடிக்க ஆதரவளித்த பிக்கியின் புதிய தலைவர் போன்ற கார்ப்பரேட் நிறுவன பிரதிநிதிகளே பாஜக வளர்ச்சி நிகழ்ச்சிநிரலில் கவனம் செலுத்த வேண்டும், இந்துத்துவ நடவடிக்கைகள் வழிவிலகல்கள் என்று சொல்லும் அளவுக்கு, பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சிநிரல் வாய்ப்புள்ள இடங்களில், வாய்ப்புள்ள தருணங்களில் எல்லாம் அமலாகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி எல்லாம் வழக்கம்போல் கொண்டாடிய இந்திய மக்கள், கிறிஸ்துமஸ் நாளை மட்டும் வழக்கமான மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் போனது. காந்தி பிறந்த தினமான, தேசிய விடுமுறை நாட்களில் ஒன்று என்று கருதப்பட்டு வருகிற, அக்டோபர் 2 அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை, அலுவலகத்துக்கு வர வேண்டும், உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி சொன்னதில், பாஜக ஆட்சியாளர்கள் அரசியல் கணக்குத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று கூட வைத்துக்கொள்வோம். கிறிஸ்துமஸ் தினத்தன்று மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று சொல்வதற்கு என்ன கணக்கு? இந்த விசயத்தில் மத்திய அரசுக்கு யார் எதிரிகளாக, வேண்டாதவர்களாக ஆகிப் போனார்கள்? அந்த நாளில், நாட்டில் ஏன் நஞ்சு கலக்கப்பட்டது? மசூதி இடிக்கப்பட்டது நாட்டின் மதச்சார்பின்மை இழையை அறுத்தெறிந்தது என்றால், கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறித்துவர்களை வேறு வேலை பார் என்று சொல்வதும், தீவிரம் குறைந்தது என்றாலும், அதை ஒத்ததொரு நடவடிக்கைதானே? ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி, சிறுபான்மை மக்களின் இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? கட்டாயப்படுத்தி, குடும்ப அட்டை வாங்கித் தருவதாகச் சொல்லி இசுலாமியர்களை இந்துக்களாக மாற்றுகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள். வீடு திரும்புகிறார்கள் என்கிறார்கள். வீடு திரும்ப, எது எனது வீடு? இந்து மதமா? தெருவில் நடக்காதே, மலத்தை தலையில் ஏந்து, காலில் செருப்புப் போடாதே, மேல் சட்டை அணியாதே, ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில் குடியிரு, பிணத்தை எரி, எப்போதும் காலின் கீழே கிட என்று சொல்லும் அதர்மம் வேண்டாம் என்றுதானே போனோம். அதில் மாற்றம் வருமா? அந்தந்த சாதிக்குத் திரும்பிச் செல்லலாம் என்று பெருந்தன்மையாகச் சொல்கிறார்களாம். சாதிய ஒடுக்குமுறையே வேண்டாம் என்றுதானே போனார்கள்? ஆசை காட்டி அழைத்ததால் போனார்கள் என்கிறார்கள். எதற்கு ஆசை? கஞ்சிக்கும் கல்விக்கும் கவுரவத்துக்கும்தானே? அவர்கள் வீடு திரும்பவில்லை என்றால்தான் என்ன?சுனாமி தாக்குமா? வெள்ளம் கொண்டு போகுமா? பூகம்பம்தான் இழுத்துக்கொள்ளுமா? மோடி பெஷாவர் பற்றி பேசுகிறார். இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே இருக்கிறார்.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அவரவர் வீடுகளில், மதங்களில் இருக்கட்டும் என்று சொல்ல மட்டும் மோடி தயாராக இல்லை. சங்பரிவார் விஷமிகள் வாய்ப்பைப் பயன்படுத்தி மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும் என்று சொல்லத் துவங்கிவிட்டனர். மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் இரட்டை தண்டனை வழங்கியிருக்கிறார்கள். தங்கள் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதை பொதுவாக மக்கள் அனுமதிப்பதில்லை. கர் வாப்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்துத்துவ சக்திகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து விட்டு, இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை மூட்டை கட்டி போகி கொளுத்திவிட்டாலே இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி யாருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்காது. அது நடக்காவிட்டால் கேள்விகள் நிற்காது.

...Full Text

அதிருப்தி குரல்களை அடக்குவது: ஆம்ஆத்மி கட்சியின் ஆளுகை மந்திரம்

பிப்ரவரியில், டில்லி சட்டமன்ற தேர்தல்களில் ஏகப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றபோது, கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், அந்த வெற்றி அச்சம் தருவதாகவும், ஆணவத்துக்கு இரையாகிவிடும் ஆபத்துக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சொன்னார். டில்லி எழுச்சிக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சிக்குள் நடப்பவற்றைப் பார்க்கும்போது, மிகச்சரியாக, கட்டற்ற ஆணவத்தின் அறிகுறிகளையே கேஜ்ரிவாலும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் முதலில் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்; இப்போது கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் சேர்ந்து, நன்கறியப்பட்ட சோசலிச செயல்வீரர்களான பேராசிரியர் ஆனந்த் குமார் மற்றும் அஜித் ஜா ஆகியோரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.   இந்தத் தலைவர்களை வெளியேற்றுவது என்ற அந்த குறிப்பான நடவடிக்கைக்கு அப்பால் - அவர்கள் சிறுபான்மைதான்; கட்சியின் எல்லா மட்டங்களிலும் கேஜ்ரிவாலுக்கு மிகப்பெரிய பெரும்பான்மை இருக்கிறது - அவர்கள் வெளியேற்றப்பட்ட விதம்தான் கூடுதல் அதிர்ச்சி தருகிறது. யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் எழுப்பிய அடிப்படையான பிரச்சனைகளுக்கு பதில் சொல்லப்படவே இல்லை. தேசிய கவுன்சில் கூட்டத்தில், கூட்டம் துவங்கும் முன்னரே, அதிருப்தி கருத்துக்கள் கொண்ட தலைவர்களை வெளியேற்றுவது தொடர்பான தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் சொல்லப்பட்டது. அந்தத் தலைவர்களும் அவரது ஆதரவாளர்களும் இழிவுபடுத்தப்பட்டார்கள்; குண்டர்களால் (என்று சொல்லப்படுகிறது) தாக்கப்பட்டார்கள். ஆம் ஆத்மி கட்சி துவங்கியதில் இருந்து கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட வந்த உட்கட்சி லோக்பால் பதவியில் இருந்த அட்மிரல் ராமதாசுக்கு, கூட்டத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு அவரும் நீக்கப்பட்டதையும் புதிய லோக்பால் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டார்.   ஆம் ஆத்மி கட்சியின் கிட்டத்தட்ட மொத்த சட்டமன்றப் பிரிவும் அர்விந்த கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக இருக்க, சில சட்டமன்ற உறுப்பினர்கள், அதிருப்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலைமை தாங்கியதாகச் சொல்லப்படுகிறது. யோகேந்திர யாதவுக்கும் பிரசாந்த் பூஷணுக்கும் ஆதரவாக நின்ற பாட்டியாலா ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தரம்வீர் காந்தி, டில்லி, திமாபூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கஜ் புஷ்கர் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் ‘உட்கட்சி ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாக’ மிகவும் தெளிவாக கண்டனம் தெரிவித்தனர். யாதவ், பூஷண் ஆகியோர் எழுப்பும் பிரச்சனைகள் ஆம் ஆத்மி கட்சி அதன் ‘நிறுவன கோட்பாடுகளை’ மீறுவது தொடர்பானவை - டில்லியில் வேட்பாளர்கள் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள், நிதி திரட்டுதல், தேர்தல் பிரச்சாரத்தை கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் தார்மீக நெறிகள் மீறப்பட்டது, வெளிப்படைத் தன்மையின்மை, முடிவு எடுப்பதில் உட்கட்சி ஜனநாயகம் இன்மை ஆகியவை இந்தப் பிரச்சனைகள். சில புகார்கள் லோக் பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. சில விசயங்களில் வேட்பாளர்களை மாற்ற வேண்டியும் நேர்ந்தது.   கட்சியின் அரசியல் - செயல்தந்திர போக்கு மற்றும் அதன் விரிவாக்கம் ஆகியவை பற்றியும் பிரச்சனைகள் எழுந்தன - மக்களவை தேர்தல்களில் பெரிய அளவுக்கு போட்டியிட கேஜ்ரிவால் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் டில்லியில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத நிலையில், கேஜ்ரிவால் டில்லி தேர்தல்களில் போட்டியிட விரும்பியதை, மீண்டும் உடனடி தேர்தல்களைத் சந்திப்பது, காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது ஆகியவற்றைத் தவிர்க்க, யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. கேஜ்ரிவால் முகாம் சொல்வதுபடி, யாதவும் பூஷணும் டில்லியில் கட்சி தோல்வியடைய வேண்டும் என்று விரும்பினார்கள். அதிருப்தியாளர்கள் மீது, குறிப்பாக பூஷண் மீது, ‘நம்பிக்கை துரோகம்’ இழைத்ததாக கேஜ்ரிவால் நேரடியாகவே குற்றம் சாட்டியதுடன், கட்சி அவர் வேண்டுமா அல்லது அதிருப்தியாளர்கள் வேண்டுமா என்று தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்; அதன் மூலம் எந்த அரசியல்ரீதியான ஊடாடலுக்கான, சமரத்துக்கான இயக்கப்போக்குக்கு இடமின்றி செய்துவிட்டார். கடைசியில், ‘மாற்று அரசியல்’ என்று ஆம் ஆத்மி கட்சி பேசி வந்ததை முடிவுக்கு கொண்டுவரும் விதம், வெறுக்கத்தக்க, முறையற்ற விதத்தில், அவர்கள் வெளியேற்றப்படுவது நடந்தேறியது.   கேஜ்ரிவால் ‘எதேச்சதிகார போக்குடன்’ செயல்படுவதாக பூஷண் குற்றம் சுமத்துகிறார்; பூஷண் ‘நம்பிக்கை துரோகம்’ இழைத்துவிட்டதாக கேஜ்ரிவால் குற்றம் சுமத்துகிறார்; டில்லியில் ஓர் ஆளும்கட்சியாக ஆம் ஆத்மி கட்சி, அரசியல்ரீதியாக பரிணமிக்கிற, உறுதிப்படுகிற பின்னணியில் இந்த மோதலைப் பார்க்க வேண்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமான கருத்தியலாளராக கருதப்பட்ட யோகேந்திர யாதவ், வழக்கொழிந்துவிட்ட இடது - வலது அரசியல் இருமத்துக்கு (பைனரி) அப்பாற்பட்ட ஓர் அரசியல் கருத்தியல் உருவாக்கம் என்று ஆம் ஆத்மி கட்சியை விவரித்தார். இடது, வலது ஆகிய இரண்டு போக்குகளில் இருந்தும் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் ஒன்றிணைக்கும் சுதந்திரம் பெற்ற, ‘ஒரு தீர்வு தரும் அமைப்பு’ என்று கேஜ்ரிவாலும் கட்சியை விவரித்தார். இந்த அபரிதமான கருத்தியல் தெளிவின்மையும் நீக்குப்போக்கும் இருந்தபோதும், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரின் சோசலிச ஆதரவு நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வது அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிரமமானதாக இருந்திருக்க வேண்டும்; டில்லி தேர்தல்களில் பெருவெற்றி பெற்றிருக்கும் இந்த நேரம், இந்த அதிருப்தி இரட்டையர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுக்க அரசியல்ரீதியாக வாய்ப்பான தருணம் என்று கேஜ்ரிவால் உணர்ந்திருக்க வேண்டும்.   சுபாஷ் சந்திர போஸ், இன்னும் சில இடதுசாரி, சோசலிச தலைவர்களை ஓரங்கட்டியது, அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பு என்று புனைந்து சொல்லப்பட்ட சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரசை அம்பலப்படுத்தியதுபோல், சமூக இயக்கங்களின் இல்லம் என்று புனையப்பட்ட ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடைப்பட்ட நிலையில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள, அதிருப்தியாளர்களை வெளியேற்றுகிறது; சோசலிச சாய்வு கொண்ட தலைவர்களை விரட்டுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்குள் அதிருப்திக் குரல்கள் ஒடுக்கப்படுவது, டில்லி தொழிலாளர் வர்க்கத்துக்கு முதமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, டில்லி தலைமைச் செயலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் தொடுக்கும் நிகழ்வுடன் சேர்ந்து நடக்கிறது.   சோசலிஸ்டுகளுக்கு, சமூக இயக்க செயல்வீரர்களுக்கு, தூய்மையான ஜனநாயகம் மற்றும் சமத்துவ அரசியல் வேண்டுமென விரும்பும் குடிமக்களுக்கு, இது நிச்சயம் எடைபோடுவதற்கான ஒரு தருணம். மேதா பட்கர் போன்ற செயல்வீரர்களும் இன்னும் பலரும் கடந்த மக்களவை தேர்தல்களின்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்கள். இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருப்பதில் இருந்து விலகியிருப்பதன் மூலம், மேதா பட்கர் தனது ஏமாற்றத்தையும் மறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ‘மாற்று அரசியல்’ என்ற வேடம் எதுவும் போடாமல், ஆளுகை செய்கிற இன்னுமொரு கட்சியாக ஆம் ஆத்மி கட்சி மாறி வரும்போது, இடதுசாரிகளுக்கும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிற ஆம் ஆத்மி கட்சி செயல்வீரர்களுக்கும் இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான காலம் நிச்சயம் வந்துவிட்டது.   எம்எல் அப்டேட் தொகுப்பு 18, எண் 14, 2015 மார்ச் 31 - ஏப்ரல் 06  

...Full Text

இணைப்பு

http://cpimltn.blogspot.in http://mlupdatetamil.blogspot.in https://www.facebook.com/cpimlliberation https://www.facebook.com/aicctutamilnadu

...Full Text

முசாபர்நகர் மதக்கலவரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, நீதி வேண்டும்! 2014 ஜனவரி 2, நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

கடும் குளிர் துவங்கிவிட்டது. முசாபர்நகர் நிவாரண முகாம்களின் கதைகள் மனசாட்சியை உலுக்குகின்றன. ஷாஹ்பூர், புதானா, மலர்பூர், சன்கதி முகாம்களிலுள்ள 28 குழந்தைகள் குளிராலும் மருந்துகள் இல்லாமலும் இறந்து போயுள்ளன. நிவாரண முகாம்களிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. வகுப்புவாத வன்முறை நடந்தபோது நிகழ்ந்த பாலியல் வல்லுறவு சம்பவங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பினும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, பாஜக, மத வன்முறையை முன்னின்று நடத்திய தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கிறது. அகிலேஷ் அரசாங்கமோ கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை முகாம்களிலிருப்பவர்களை பலவந்தமாக வெளியேற்றும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. மட்டுமின்றி, 5 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக அவர்கள் எங்கிருந்து வெளியேற்றப்பட்டார்களோ அந்த கிராமங்களுக்குத் திரும்பும் உரிமையைக் கைவிட வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறது. 5 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு ‘நானும் எனது குடும்பமும் எங்கள் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களால் எனது வீட்டையும் கிராமத்தையும் விட்டு வந்துவிட்டோம். இனி எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் கிராமத்துக்கோ வீட்டிற்கோ திரும்ப மாட்டோம்’ என உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்துகிறது. நிவாரண முகாம்கள் அமைக்க வன நிலங்களை ஆக்கிமித்ததாகக் கூறி கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர் மீது உத்தரப்பிரதேச வனத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகிற குளிர்கால உடைகள், விறகு, மருந்துகள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வாங்க நிதி அளிக்குமாறு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இககமாலெ வேண்டுகோள் விடுக்கிறது. 2014, ஜனவரி 2 அன்று அகில இந்திய அளவில் எதிர்ப்பு நாள் அனுசரிக்க இககமாலெ அழைப்பு விடுக்கிறது. கலவரங்களில் ஈடுபட்ட அனைவரையும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்முறைக் குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். உத்தரப்பிரதேச அரசு கலவரத்தால் இடம் பெயர்ந்த வர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண, மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முசாபர்நகர் மதக்கலவரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, நீதி வேண்டும் என்ற முழக்கத்துடன் மாலெ கட்சி நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 28 அன்று முசாபர்நகர் சென்ற இககமாலெ குழு வசூலிக்கப்பட்ட முதல் தவணை நிவாரணப் பொருட்களை வழங்கியது. சென்னை திருவல்லிக்கேணியில் இது தொடர்பாக நடந்த பிரச்சாரத்தில் இசுலாமியர்களும் இந்துக்களுமாக டிசம்பர் 29 அன்று ஒரே நாளில் ரூ.5,000 நிதியளித்தனர். கோவையில் மக்கள் மத்தியில் நிவாரண நிதி கேட்டபோது இசுலாமியர்களும் இந்துக்களுமாக டிசம்பர் 29 அன்று ஒரே நாளில் ரூ.5,000 நிதியளித்தனர்.

...Full Text

புதுக்கோட்டையில் மக்கள் கோரிக்கைப் பேரணி

புதுக்கோட்டையில், பிப்ரவரி 11 அன்று, அரிவாள் சுத்தியல் கொடிகளுடன் ஜெயலலிதா அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வந்த பேரணியை மக்கள் வியப்புடன் பார்த்தார்கள். பிறகுதான் இது மக்கள் விரோத நடவடிக்கைகள் கொண்ட ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்காத புரட்சிகர கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்று புரிந்து கொண்டார்கள். பேரணியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, மனு கொடுத்தவர்களுக்கு நிலம், வீட்டுமனை வேண்டும். புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயக் கடனை தள்ளுபடி செய், நிலவரி, வீட்டு வரியை ரத்து செய், தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டு, சாதி ஆதிக்க சக்திகளுக்கு தண்டனையை உறுதி செய், மாநிலத்தில் பொருளுள்ள லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வா, ஆடு, மாடு விலையில்லாப் பொருட்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்கு, பெண்களுக்கு அச்சமற்ற சுதந்திரத்தை உறுதி செய், 100 நாள் வேலைத் திட்டத்தில் சட்டக்கூலி வழங்கிடு, அளவு முறையைக் கைவிடு, சிறு குறு விவசாயத்துக்கும் பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்து என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வேலை நிறுத்தத்தில் இருக்கும் வங்கி ஊழியர் போராட்டம் வெல்லட்டும் எனவும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர். கிட்டத்தட்ட 1000 பேர் கலந்து கொண்ட பேரணியை அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர். டி.கே.எஸ். ஜனார்த்தனன் துவக்கி வைத்தார். பேரணிக்கு தோழர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தடைந்தது. அங்கு முதல் நுழைவாயிலிலேயே மக்கள் காவல் துறையால் நிறுத்தப்பட்டனர். பிரதிநிதிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிரதிநிதிகளுடன் பேச மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் உதவியாளர், கோட்டாட்சியர் என யாரும் இல்லாத காரணத்தால், மக்கள் அனைவரும் ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடம் முன் சென்று தாழ்வாரத்தில் (போர்ட்டிகோ) அமர்ந்தனர். அதன் பிறகே கோட்டாட்சியர் நேரடியாக மக்களிடம் வந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்

...Full Text

சட்டவிரோத கருமுட்டை விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத கருமுட்டை விற்பனைக்கு எதிராகவும் தோழர் பொன்.கதிரவன் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும் 18.01.2014 அன்று குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், எ.சந்திரமோகன், வழக்குரைஞர் ப.பா.மோகன், நாமக்கல் மாவட்ட பியுசிஎல் மாவட்ட செயலாளர் பகலவன், அயாலா மாவட்ட அமைப்பாளர் தோழர் பி.கணேசன், தமிழ் தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் நிலவன், முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் 1. தமிழ்நாட்டில் பெண்களை நிர்ப்பந்தப்படுத்தி சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை நடப்பது பற்றி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கருமுட்டை விற்பனையில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், தரகர்கள் ஆகியோர் பற்றி, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். 2. கருமுட்டை தானம், கருவறை வாடகை ஆகியவற்றை முறைப்படுத்த, மத்திய அரசை கைகாட்டாமல், உடனடியாக சட்டம் உருவாக்க வேண்டும். சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். 3. பெண்களின் கருமுட்டைகளை தானம் தருகிறோம் என்ற பெயரில் தனியார் மருத்துவ மனைகள் விற்பனையில் ஈடுபடுவதை கண்காணிக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். 4. கணவன்மார்கள் மனைவிமார்களை கருமுட்டை விற்பனையில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 5. இது தொடர்பாக காவல் நிலையங்களில் பெண்கள் புகார் கொடுத்தால் வழக்கைப் பதிவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 6. சகுந்தலாவின் 6 வயது குழந்தை ஹரிணியை சகுந்தலாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

...Full Text