COMMENTARY

சட்டவிரோத கருமுட்டை விற்பனை: பெண்ணுடல் மீது இன்னுமொரு தாக்குதல்

டாக்டர் ஹெர்டா ஓபர்ஹுசர் குழந்தைகளுக்கு எண்ணெய் ஊசி போட்டு கொன்றார். ஊசி போட்டதில் இருந்து மூன்று முதல் அய்ந்து நிமிடங்களில் மரணம் ஏற்படும். இந்த இடைவெளியில் முழுநினைவு இருக்கும். ஊசி போடப்பட்டவர்களின் கால்,கை மற்றும் முக்கியமான உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக வெட்டி எடுக்கப்படும். கார்ல் கிளாபர்க் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆயிரக்கணக்கான யூத பெண்களின் கருப்பைக்குள் ஊசி மூலம் வேதியல் பொருட்களை செலுத்தியுள்ளார். யூத பெண்களுக்கு ஊசி போடப்பட்டு மகப்பேறு ஆற்றல் அகற்றப்பட்டது. இரண்டு எக்ஸ்ரே எந்திரங்களுக்கு நடுவில் பிறப்புறுப்பில் கதிர்வீச்சு பாயும்படி யூத பெண்களை அமரவைத்தார். கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அவர்களால் எந்த வேலையும் செய்யமுடியாமல் போய்விட்டால் அவர்கள் வீண் என்று விசவாயு அறையில் கொல்லப்பட்டுவிடுவார்கள். பெண்களுக்கு 10 நாட்களுக்கு உயர்திறன் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு முட்டை உற்பத்தி செயற்கையாக அதிகரிக்கப்படும். பிறகு மூன்று நாட்கள்கழித்து, மயக்க மருந்து தரப்பட்டு, உடலுக்குள் ஊசி செலுத்தப்பட்டு அந்த ஊசி மூலமாகவே அந்த முட்டைகள் வெளியே எடுக்கப்படும். ஒரு பெண் எத்தனை முட்டைகள் உருவாக்க முடியும் என்பது பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. கூடுதல் கருமுட்டைகள் எடுக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் பின்விளைவுகளை உருவாக்கும். அந்தப் பெண்களுக்கு தலைவலி,உடல் பருமன், அசதி முதல்,கைகால் செயல் இழத்தல்,சிறுநீரகக் கோளாறு, மரணம் என பலவிதமான பாதிப்புகள் ஏற்படும். நவீன வதை முகாம்கள் முதல் இரண்டு நடைமுறைகள் ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்த யூதர்கள் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள். மனித உடல் எவ்வளவு வெப்பம், குளிர், வலி தாங்கும் என்று ஹிட்லரின் மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்க்க யூதர்கள் பயன்படுத்தப்பட்டனர். மூன்றாவது செயல்முறை தமிழ்நாட்டில் இப்போது நடப்பது. பெண்ணுடலும் எவ்வளவு தாங்கும் என்று தமிழ்நாட்டின் சில மருத்துவர்களும், ஆணாதிக்கச் சமூகமும் விதவிதமாக பரிசோதித்துப் பார்க்கின்றனர். இந்த மூன்று செயல்முறைகளில், ஹிட்லர் வதை முகாம்களில் நடந்தது வரலாற்று சோகம். மேற்கு மாவட்ட மருத்துவமனைகளில், அதுபோன்ற ஒன்றுதான் நடக்கிறது. மனிதர்களைப் பற்றிய எந்த உணர்வும் அற்ற ஒரு கூட்டம் நடத்துகிற வெறிச் செயல்கள் இவை. இந்த மூன்றாவது செயல்முறைக்கு 18 முறை உட்படுத்தப்பட்ட பெண் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான சகுந்தலா. 25 வயதுக்குள், திருமணம், 5 வயது குழந்தை, 18 முறை கருமுட்டை விற்பனை, திருமணமான மூன்று மாதங்களில் கணவனின் நிர்ப்பந்தத்தால் சிறுநீரக விற்பனை என எல்லாம் பார்த்துவிட்டார். குடும்பமும் திருமணமும் பெண்ணுக்கு பாதுகாப்பு என்று சொல்பவர்க்கு சகுந்தலாவின் கதறல் சத்தம் கேட்கிறதா? சாதி, மத, இன துவேசம் எதுவானாலும் பெண்ணுடல் பழிதீர்க்கும் களம். பார்க்கிறோம். முடிவின்றி பார்க்கிறோம். பக்கத்தில் இருப்பவனுக்கும் பெண்ணுடல் இன்னும் எத்தனை காலம் பணம் செய்யும் பொருளாகவே தொடரும்? பெண்ணுடல் மீது தொடுக்கப்படும் விதவிதமான போர்கள் என்று தான் ஓயும்? சகுந்தலாக்கள் கதை சகுந்தலாவும் அவரது கணவரும் பஞ்சாலை தொழிலாளர்கள். உலகெங்கும் உள்ள ஒடுக்கப் பட்டோர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நவராஜ் என்ற கூலியடிமைக்கு சகுந்தலா கொத்தடிமை. நவராஜுக்கு தனது மனைவி சகுந்தலா தங்க முட்டையிடும் வாத்து. வந்து கொண்டே இருக்கும் தட்சணை. ஜனவரி 2 அன்று சகுந்தலா நாமக்கல் மாவட்ட மாலெ கட்சி அலுவலகத்துக்கு வந்தார். தனது கணவர் நவராஜ் தன்னை கருமுட்டை விற்பனையில் தொடர்ந்து கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகவும், அதன் மூலம் வரும் பணத்தை குடித்துத் தீர்ப்பதாகவும், உடல் உறவின்போது ஆபாசப் படங்களைப் போட்டு அதில் வரும் காட்சிகள் போல நடக்கச் சொல்வதாகவும், ஆண்களுடன் பேசினால் சந்தேகப்பட்டு அடிப்பதாகவும் தெரிவித்தார். வேறு நடவடிக்கை ஏதும் எடுக்கும் முன்பு அவர் கணவரிடம் விசாரிப்பதற்காக மாலெ கட்சி தோழர்கள் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அவரிடம் அவதூறு மட்டுமே பதிலாக கிடைத்தது. ஜனவரி 6 அன்று காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சகுந்தலா சென்றபோது காவல்துறையினர் நவராஜ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்கள் பிரிந்துவிட அறிவுரை சொல்லி காவல் நிலையம் எதிரில் உள்ள வழக்கறிஞரிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த வழக்கறிஞரும் அவர்களிடம் ஏதோ எழுதித் தந்து அவர்கள் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார். ஜனவரி 7 அன்று தனது குழந்தையுடன் மாலெகட்சி அலுவலகத்துக்கு வந்த சகுந்தலா, நவராஜ் தனது குழந்தையுடன் சேலம் செல்ல திட்டமிடுவதாகவும் தனக்கு குழந்தை வேண்டும்என்றும் சொல்ல, வேறு வழியின்றி மாலெ கட்சி மாவட்ட குழு உறுப்பினர், தோழர் பொன்.கதிரவன் காவல் துறையினருக்கு புகார் மனு எழுதுகிறார்.அலுவலகத்துக்கு கத்தியுடன் வந்த நவராஜ், தோழர் பொன். கதிரவனை தலையில் அரிவாளால் கடுமையாக தாக்குகிறார். பிறகு தன் நண்பர் வீட்டில் இருந்த சகுந்தலாவையும் சரமாரியாக தாக்குகிறார். பிறகு அரளி விதையை குடித்துவிட்டதாகச் சொல்லி சகுந்தலா சேர்க்கப்பட்ட அதே மருத்துவமனையில் காவல்துறையினரால் சேர்க்கப்படுகிறார். தோழர் பொன்.கதிரவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று இப்போது பொதுப் பிரிவில் உள்ளார். அவர் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் அவர் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இன்னும் இல்லை. ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகுந்தலா, பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் ஆபத்து கட்டத்தை தாண்டி உடல் நலம் தேறி வருகிறார். இன்னும் மருத்துவமனையில் உள்ளார். இந்தக் கட்டுரை எழுதும் வரை நவராஜ் மீது சகுந்தலா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. தோழர் பொன்.கதிரவன் மீதான தாக்குதல் தொடர்பான புகார், மற்றும் சகுந்தலாவின் நண்பர் கொடுத்த தாக்குதல் புகார்ஆகியவற்றில் மட்டும் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் சகுந்தலா காவல் உதவி ஆய்வாளரிடமும் ஈரோடு குற்றவியல் நடுவரிடமும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தனது கணவர் நவராஜ் கருமுட்டை விற்பனைக்கு தன்னை கட்டாயப்படுத்துவதாகவும் குடித்து விட்டு அடிப்பதாகவும் சொல்லியுள்ளார். கருமுட்டை விற்பனைக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை பெறுவதாகவும், தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவதாகவும், சேலத்தில் வினாயகா மருத்துவமனை, ஜே.எஸ் மருத்துவமனை, வாழப்பாடியில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவற்றுக்கு தான் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், சில மருத்துவமனைகளின் பெயர்கள் நினைவில்லை என்றும் கேரளாவுக்குக் கூடஒருமுறை அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சகுந்தலா சொல்லியுள்ளார். சகுந்தலாவை 18 முறை கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தி நவராஜ் ரூ.3 லட்சம்வரை பெற்று செலவழித்துள்ளார். சகுந்தலாவின் சிறுநீரக விற்பனையில் ரூ.1 லட்சம் பெற்று செலவழித்துள்ளார். சகுந்தலா வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்த பிறகு கருமுட்டை விற்பனை செய்தி பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருப்பதால், கருமுட்டை வாங்கும் மருத்துவமனைகள் கருமுட்டை தரும் பெண்களை, உண்மையை பேசக் கூடாது என்று தரகர்கள் மூலம் மிரட்டுவதாக சொல்லப்படுகிறது. குற்றவாளிகள் சகுந்தலாக்கள் கதையில் யார் குற்றவாளி? நவராஜ் மட்டுமா? காடு வெளஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்ற பாட்டை இன்று மாற்றி எழுத வேண்டும். சிறுநீரகங்கள், கருமுட்டைகள், கருப்பைகள் உள்ளன. அவற்றையும் முதலாளித்துவச் சந்தை ஒரு கைபார்க்கும். 2010 நிலவரப்படி அமெரிக்காவில் கரு முட்டை விற்பனைக்கு 35,000 டாலர் கிடைக்கிறது. படிக்கும்பெண்கள், கடனில் சிக்கிக் கொண்டவர்கள், சேமிப்பு வேண்டும் என கருதும் பெண்கள் அங்கு கருமுட்டை விற்கிறார்கள். பெண் கருமுட்டையை விற்பது, அந்தப் பெண் விரும்பினால், அந்தப் பெண் முடிவெடுத்தால் அதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அவள் உடல். அவள் விருப்பம். ஆனால், இப்போது நடக்கும் கருமுட்டை விற்பனையோ, கருவறை வாடகையோ பெண்ணின் விருப்பப்படி நடப்பதில்லை. உடலுக்குள் ஊடுருவும் ஒரு மருத்துவ செயல்முறையை, அவர்கள் உயிர் காக்கும் அவசியத்தின் போதுகூட, மனிதர்கள் ஒருபோதும் விரும்பி ஏற்பதில்லை. ஆனால் பெண்கள் கருமுட்டை விற்க தயாராகிறார்கள். அமெரிக்காவானாலும், இந்தியாவானாலும் வசதிபடைத்த பெண்கள் கருமுட்டை விற்பனையில், கருவறையை வாடகைக்கு விடுவதில் ஈடுபடுவதில்லை. அடுத்த வாரிசு, ஆண்மையின் அடையாளம் என பிள்ளைபேறு பற்றிய புனித கற்பிதங்கள் நொறுங்கிப் போவது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், பெண்ணுடலை வெறும் பண்டமாக்கி, முழுவதுமாகவும், பகுதி பகுதியாகவும், தவணை முறையிலும் விற்பனை செய்து பணம் வரும் வழியை மட்டும் பார்க்கும் முதலாளித்துவச் சந்தை இங்கு குற்றவாளி. என் மனைவியை நான் அடிக்கிறேன், இது என் குடும்பப் பிரச்சனை, உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று சொல்லும் ஆணின் உரிமையை, பெண்ணுடல் ஆணுக்குச் சொந்தம் என்ற அதிகாரத்தை, காலம்காலமாக பாதுகாக்க முன்னுரிமை கொடுத்ததில் நவராஜ்கள் உருவாகிறார்கள். சகுந்தலாக்கள் பலி ஆகிறார்கள். ஆணாதிக்க அத்துமீறல் இங்கு குற்றவாளி. உடலுறுப்புக்களை அறுத்து விற்றால்தான் வாழ முடியும். உடலுறுப்புக்களை விற்க முடியும். தமிழ்நாட்டில் இதற்கு நிலைமைகளும் வாய்ப்புக்களும் ஏராளம். சிறுநீரகம் விற்பனை முகவர் பிடிபட்டார் என்ற செய்தி தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களை கொத்தடிமை முறையும் சிறுநீரக விற்பனையும் மாறிமாறி பதம் பார்த்தன. இப்போது கருமுட்டை விற்பனை ஒரு திட்டவட்டமான வலைப்பின்னலுடன் இயங்கி வருவது தெரியவருகிறது. பெங்களூர், சேலம், நாகர்கோவில், ஈரோடு, தாராபுரம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை வியாபாரம் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது. 2010 முதல், சிறிய பஞ்சாலைகளில் அத்தகூலிக்கு வேலை செய்யும் பெண்களின் கருமுட்டை விற்பனை நடந்து வருவதாகவும்,இது போன்ற நடவடிக்கைகளின் பின்னால் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை உதவியும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் குற்றவாளிகள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பு என்று சொல்கிற ஜெயலலிதா, கருமுட்டை விற்பனை சட்ட விரோதமாக நடப்பதற்கு செழிப்பதற்கு கருணாநிதியையும் அய்முகூவையும் காரணம் காட்ட முடியாது. தமிழகத்தில் இன்று ஆட்சி செய்வது ஜெயலலிதா. அவர் தான் பதில் சொல்ல வேண்டும். அரசுதான் குற்றவாளி. பிரசவம் பார்க்க வந்த பெண்ணை விரட்டியடித்த பொது மருத்துவமனை இருக்கிற சேலத்தில் சட்டவிரோதமாக கருமுட்டை வாங்க தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன என்றால் பதில் சொல்ல வேண்டியது ஜெயலலிதாதான். மாநிலத்துக்கு வருவாய் ஈட்டும் நல்லெண்ணத்துடன் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்படும் டாஸ்மாக் உட்பட பெண்களின் படுபாதகமான வாழ்க்கை நிலைமைகளை உறுதிப்படுத்துகின்றன. போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அய்நா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழ்நாட்டைச்சேர்ந்த பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு மும்பையிலும் டில்லியிலும் விற்கப்படுகிறார்கள் என்று சொல்கிறது. வறுமையால் வேறு வழியின்றி மூன்று வேளை உணவாவது கிடைக்கட்டுமே என்று பெற்றோர்களாலேயே அனுப்பப்படும் குழந்தைகள் தவிர, குழந்தைகள் கேரளா போன்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டு பல்வேறு வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க 13 அம்ச திட்டம், குண்டர்சட்டம் என்றார்களே, சகுந்தலா கொடுத்த புகாரை காவல்துறை முறையாக பதிவு செய்து விசாரணை செய்திருந்தால், தோழர் பொன்.கதிரவன் மீதான தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கும். சகுந்தலாவுக்கு உண்மையிலேயே நவராஜிடம் இருந்து விடுதலை கூட கிடைத்திருக்கலாம். சகுந்தலா கொடுத்த புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல், அதை கணவன் - மனைவி பிரச்சனையாக்கி அலட்சியப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் இங்கு குற்றவாளிகள். பெண் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தொழிலாளர் என்ற வகையினமே இல்லை என்பது போல் ஜெயலலிதாவின் இரண்டரை ஆண்டு கால நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அவர்கள் பற்றி பேசினால்,ஜெயலலிதாவுக்கு ஷாக் அடிக்கும். அதனால் பேச மறுக்கிறார். தமிழ்நாட்டின் பெண் தொழிலாளர்கள் சுமங்கலித்திட்டம் முதல் விற்பனை ஊழியர்கள் ஊடாக கீபோர்டு அடிமைத்தனம் வரை கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு அப்பால் பெண் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வித பாதுகாப்பும் கவுரவமும் அற்றதாக இருப்பதையும் கருமுட்டை விற்பனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. சகுந்தலாவுக்கு கணவன் நிர்ப்பந்தம். கரு முட்டை விற்பனைக்கு உள்ளாக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் விதவிதமான நிர்ப்பந்தங்கள் இருக்கக்கூடும். அடிப்படையில் அது பொருளாதார நிர்ப்பந்தம். கவுரமான ஊதியம், பிறவேலை நிலைமைகள் இருந்தால், வறுமை விரட்டாதிருந்தால், யாரும் கருமுட்டையையும் சிறுநீரகத்தையும் விற்க முன் வர மாட்டார்கள். தேவை சில உடனடி நடவடிக்கைகள் ஜெயலலிதா பிரதமராகி நாட்டை காக்க வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் விரும்புகின்றன. ஒட்டு மொத்த இந்திய மக்கள் வாழ்வு காக்கும் பெரிய பணி எதிர்வர இருப்பதால், மக்கள் நல்வாழ்வு வாழ 2014 மே மாதம் வரை காத்திருங்கள் என்கிறார். அதுவரை தமிழ்நாட்டின் பெண்கள் வதை முகாம்களில் வதைபட முடியாது. 40 வேண்டும் என்று சொல்கிற ஜெயலலிதா,பாதுகாப்பு, கவுரவம் கோரும் தமிழக பெண்கள் குரலுக்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களை நிர்ப்பந்தப்படுத்தி சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை நடப்பது பற்றி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கருமுட்டை விற்பனையில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், தரகர்கள் ஆகியோர் பற்றி, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். கருமுட்டை தானம், கருவறை வாடகை ஆகியவற்றை முறைப்படுத்த, மத்திய அரசை கை காட்டாமல், உடனடியாக சட்டம் உருவாக்க வேண்டும். சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பெண்களின் கருமுட்டைகளை தானமாகத் தருகிறோம் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகள் விற்பனையில் ஈடுபடுவதை கண்காணிக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். கணவன்மார்கள் மனைவிமார்களை கருமுட்டை விற்பனையில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக காவல் நிலையங்களில்பெண்கள் புகார் கொடுத்தால் வழக்கைப் பதிவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியாக பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி முதலமைச்சராக இருக்கிற குஜராத்தில் உள்ள ஆனந்தில் அகன்ஷ்கா கிளினிக்கில் கருவறை வர்த்தகம் ஆகப் பிரமாதமாக நடக்கிறது. இங்கு வறிய பெண்களுக்கு ஒரு கருத்தரிப்புக்கு அதிகாரபூர்வ வருமானம் ரூ.3,30,000 முதல் ரூ.4,62,000 வரை தரப்படுகிறது என்று தருபவர்கள் சொல்கிறார்கள். (குஜராத் பெண்கள் நிச்சயம் இந்தத் தொகை பெறுவதில்லை). இந்தியாவில் இதற்கு ஆகிற மொத்த செலவும் ரூ.7,92,000. இது அமெரிக்காவில் ரூ.46,20,000. அதனால் அமெரிக்கர்கள் பலர் குஜராத் பெண்களின் கருவறையை வாடகைக்கு எடுக்கின்றனர். மோடி தனது வளர்ச்சி பெருமிதத்தில் இந்த வகை குஜராத்பெண்களை காட்டுவதில்லை. அங்கு கருவறை என்றால், இங்கு கருமுட்டை. அங்கும் பிரதமர் கனவு. இங்கும் பிரதமர் கனவு.

...Full Text

இந்தியாவில் இசுலாமியர்களுக்கு இடம் இல்லையா? – எஸ்.குமாரசாமி

முசாபர்நகர். மதச்சார்பற்றவர் என, இகக, இககமா தோழர்களின் தரச் சான்றிதழ் பெற்ற முலாயம் கட்சி ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்தில்தான், முசாபர்நகர் நடந்தது. முலாயமின் மதச்சார்பின்மை, அவரது சிறுபான்மையினர் சார்பு நிலை அவரை ‘மவுலானா’ முலாயம் என்று அழைக்கும் நிலைக்குச் சென்றது என்றார்கள். முசாபர்நகர், முலாயம் சாயத்தை வெளுக்க வைத்துவிட்டது. இந்திய பாணி மதச்சார்பின்மை எப்போது வேண்டுமானாலும் மதவெறியின் பக்கம் சாயும் என்பதை மீண்டும் ஒருமுறை அக்கறையுள்ள இடதுசாரிகளுக்கு கவனப்படுத்துகிறது. முசாபர்நகர், பாக்பத், சாம்லி, மீரத் மாவட்டங்களில், இந்த முறை சங்பரிவார் கூட்டம், ஜாட் ஜாதியினரை இசுலாமிய வேட்டையில் ஈடுபடுத்துவதில் வெற்றி பெற்றது. பல பத்தாண்டுகளாக, வட இந்தியாவில் சங்பரிவார் மதவெறி அரசியல் தலைவிரித்தாடி வரும் போதும், ஜாட் சாதியினருக்கும் இசுலாமியருக்கும் மோதல்கள் நடந்ததில்லை. இசுலாமியர்கள் ‘காதல் புனிதப் போர்’ தொடுக்கிறார்கள் எனத் திட்டமிட்டு சங்பரிவார் துவக்கிய பிரச்சாரம், 2013ல்தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் படுகொலையில் முடிந்தது. மறுபுறம் பாஜகவின் வாக்கு வங்கி நிறைந்தது. ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் ஜாட் வாக்குகள் பாஜகவுக்குக் குவிந்தன. கலவரம் நடந்திராவிடில், டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில், பாஜக எண்ணிக்கை இன்னமும் குறைந்திருக்கும். இசுலாமிய வேட்டை. வாக்கு அறுவடை. செப்டம்பர் அக்டோபரில், சொந்த மண்ணில் இசுலாமியர்கள் 40 ஆயிரம் பேர் வரை அகதிகள் ஆக்கப்பட்டார்கள். நிவாரண முகாம்களில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது? இசுலாமியர்களிடம் நீங்கள் திரும்பவும் சொந்த ஊருக்குப் போக மாட்டேன் என உறுதிமொழி தந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் தருகிறேன் என்றார் முலாயம். இசுலாமிய சொத்துக்கள், வாழிடம், வாழ்ந்த கலாச்சாரம் எல்லாமே பறிபோகும். சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்குச் செய்ததை, சங்பரிவார் இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. இந்த வேட்டைக்கு, துணை போய் காவல் நிற்பவர்கள், முலாயம் வகையறாக்கள். இந்த வரிசையில், சங்பரிவாருடன், வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் சேர வேண்டும் எனத் தமிழ்நாட்டில் முயற்சிகள் நடக்கின்றன. செப்டம்பர் 7 முதல் டிசம்பர் 20 வரை முகாம்களில் இருந்தவர்களில் குழந்தைகள் உட்பட 34 பேர் இறந்ததாக முலாயம் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் குப்தா, குளிரால் யாரும் சாவார்களா, சைபீரியாவில் மக்கள் வாழவில்லையா என்று கேட்டு, ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிடுங்கள் என்று சொன்ன பிரெஞ்சு மகாராணி மேரி ஆன்டனெட்டை நமக்கு நினைவுபடுத்துகிறார். முசாபர்நகருக்கு முன்னோடி நிச்சயம் குஜராத்தான். 2002ல் நரேந்திரமோடி தலைமையில் குஜராத்தில் ஆயிரங்களில் இசுலாமியர்கள் கொல்லப்பட்ட பிறகு, 1,68,000 இசுலாமியர்கள் வாழுமிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். நிவாரண முகாம்கள் மனிதர் வாழத் தகுதியற்றவையாக இருந்தன. சாகடித்தாய், பின்னர் தப்பிப் பிழைத்திருப்பவர்களைச் செத்து இருக்கலாமே என நினைக்க வைக்கிறாயே, என்ன அநியாயம் என நாடே கேள்வி எழுப்பியது. மோடி பதில் சொன்னார். எங்கே எப்போது என்ன பதில் சொன்னார் தெரியுமா? குஜராத்தில், மெசானாவின் கோவில் நகரமான டெக்கார்ஜியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியபோது, செப்டம்பர் 9, 2002 அன்று நரேந்திரமோடி, நிவாரண முகாம்கள் குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்றார். இப்போது முலாயம், முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை, கேள்வி கேட்கும் மாற்றுக் கட்சியினரே உள்ளனர் என்கிறார். உச்சநீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகும், முகாம்களில் தங்கி இருந்தவர்களை வெளியேற்றி, அந்த இடங்களைப் புல்டோசர்களால் தரைமட்டமாக்குகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மீது, அவர்களுக்கு நிவாரணமோ மறு வாழ்க்கையோ அளிக்காத முலாயம் கட்சி அரசாங்கம், வன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கு போட்டது. பாப்ரி மசூதி இடிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த மத்திய காங்கிரஸ் அரசுதான், அன்று மசூதி இடிப்புக்குத் துணை போனது. இன்றும், பாதிக்கப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், நிவாரணம், மறுவாழ்க்கை மறுப்பு நிகழும் போதும், மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு மவுனம் சாதிப்பதன் மூலம் மதவாத சக்திகளை ஊக்குவிக்கிறது. ரோமாபுரி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இசுலாமிய மக்கள் மீளாத்துயரில் சிக்கி இருக்கும்போது, உத்தர பிரதேச அமைச்சர்களின் தலைமையில், சமாஜ்வாதி கட்சி, பாஜக, அஜித் சிங்கின் ஆர்எல்டி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், துருக்கி, கிரீஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, அய்க்கிய அரபு குடியரசு போன்ற நாடுகளுக்கு கல்வி ‘சுற்றுலா’ செல்கிறார்கள். முலாயம் மற்றும் அகிலேஷின் சொந்த மாவட்டமான எட்டாவாவில், செஃபாய் மஹோத்சவ் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான், மாதுரி தீட்சித் ஆடிப்பாடிச் சென்றுள்ளனர். உத்தரபிரதேசத்தில் நிலவரம் கலவரமாக இருக்கும்போது டெல்லி தலைநகர் மண்டலத்தில் என்ன வாழ்கிறது? ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன், காஷ்மீரில் இராணுவம் இருக்கலாமா வேண்டாமா என்பதில் காஷ்மீர் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்றார். தேச விரோத மக்கள் விரோத தேச பக்தர்கள் கூப்பாடு போட, பிரசாந்த் பூஷன் காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி எனவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராணுவ விவகாரங்களில் ராணுவமே பார்த்துக் கொள்ளும் எனவும் சொல்லிப் பின்வாங்க நேர்ந்தது. அதற்குப் பிறகும், ஆம் ஆத்மி கட்சியின் கவுசாம்பி அலுவலகம் இந்து ரக்ஷா தள் என்ற சங்பரிவார் அமைப்பால் சூறையாடப்பட்டது. தமிழகத்தின் நிலைமை என்ன? பொய் வழக்குகள். சிறையிலடைப்பு. சமூக பொருளாதார வாழ்வில் தொடர் புறக்கணிப்பு. ஓரஞ்சார விளிம்புகளுக்கு விரட்டப்படுதல். சென்னையில் ஏழை இசுலாமிய சிறுவன் தமீம் அன்சாரிக்கு நேர்ந்த கதி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனப் பொருத்திப் பார்க்க உதவும். மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த முகம்மது ஹனிபா மற்றும் ஷபீனா பேகத்தினுடைய மகன் தமீம் அன்சாரி. முகம்மது ஹனிபா ஆட்டோ ஓட்டி வாழ்ந்து மடிந்தவர். ஷபீனா பேகம் ஓர் உணவகத்தில் பாத்திரம் கழுவுவதோடு கிடைத்த வீட்டு வேலைகளைச் செய்பவர். ஒற்றையறை வாடகை வீட்டில் மாற்றுத் திறனாளியான ஒரு சகோதரியும் தமீம் அன்சாரிக்கு இருக்கிறார். தமீம் அன்சாரிக்கு வயது 16. தமீம் அன்சாரி ஒரு பாவம் அல்ல, இரு பாவங்கள் செய்துள்ளார். முதல் பாவம் அவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தது. இரண்டாவது பாவம் அவர் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது. கோவில் உண்டி திருட்டு சம்பந்தமாக இவரை நீலாங்கரை காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்றார்கள். காவல் ஆய்வாளர் புஷ்பராஜூக்கு சிறுவன் அன்சாரி எல்லை தாண்டிய பயங்கரவாதியாகக் காட்சியளித்துள்ளான். அவர் சொல்லும் குற்றங்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி அன்சாரியின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் எனவும் அப்போது குண்டு வெடித்தது எனவும் சொல்லப்படுகிறது. ஆபத்தான நிலையில் அந்த சிறுவன் சோழிங்கநல்லூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், கவனக் குறைவாக நடந்து கொண்டார் என்று சுலபமாகச் சொல்லி தப்பிக்க விடக்கூடாது. சிறுவனை இவர் சிறுவர் நீதி வாரியம் முன்பு ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் அன்சாரியின் வாயில் துப்பாக்கியை வைத்தது குற்றம். ஒப்புதல் வாக்கு மூலத்தை மிரட்டிப் பெறப் பார்த்தது குற்றம். துப்பாக்கியால் சுட்டது குற்றம். பெண்கள் விசயத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கூருணர்வால் தருண்தேஜ்பால் இன்னமும் சிறையில் இருக்கிறார். காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் ஏழை இசுலாமிய சிறுவனை சுட்டதற்காக சிறையிலடைக்கப்பட வேண்டும். தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். தலைப்பில் உள்ள கேள்வியை, அதாவது, இந்தியாவில் இசுலாமியர்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியை எப்படி அணுகுவது? இசுலாமியர்க்கு இந்தியாவில் இடம் இல்லை என்பவர்கள்தான், பழங்குடியின மக்களுக்கு வனங்கள் சொந்தம் இல்லை, தலித்துகளுக்கு கவுரவம் சமத்துவம் மீது உரிமை இல்லை, விவசாயிகளுக்கு விவசாய நிலங்களின்மீது உரிமை இல்லை, தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வேலை பணிப்பாதுகாப்பு சங்க உரிமை இல்லை என்கிறார்கள். சுரண்டப்படுபவர்கள் ஒடுக்கப்படுபவர்கள், சாதி மொழி இன மத எல்லைகள் தாண்டி, பண மூட்டைகளுக்கு, ஊழல் பெருச்சாளிகளுக்கு, மதவெறியர்களுக்கு, ஆதிக்க சக்திகளுக்கு இந்தியா இல்லை தமிழ்நாடு இல்லை என, உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். தனித்தனி சிறுபான்மைகள், கரம் கோர்த்தால் பெரும்பான்மை. அடையாள அடிப்படையிலான இயக்கங்கள், தனிப்பிரச்னைகள் மீதான இயக்கங்கள், அனைத்தும் தழுவிய விதத்திலான விடாப்பிடியான இடதுசாரி ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து களம் கண்டால், காலம் மாறும்.

...Full Text

தைரியமாகச் சொல், இது குடியரசுதானா….?

தாலிக்குத் தங்கம், புரட்சித்தலைவியின் புரட்சிகரமான திட்டம் என்று ஜெயலலிதா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புள்ளி விவரங்களும் சொல்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார்: ‘40 பவுன் நகை போச்சு. பொழப்புக்குன்னு இருந்த ஆட்டோ போச்சு. இப்பத்தான் காசுக்கு வேற வழியில்லாததால தொழிலுக்கு (மீன்பிடி) போறாக... இப்ப வாரத்துக்கு ஒரு நாள் குடிக்கிறாக...’ அவர் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு பெண், ‘எங்க வீட்டுலயுந்தான் 30 பவுன் நகை போச்சு... வீடு போச்சு’ என்றார். தமிழ்நாட்டில் பல பெண்கள் இதேபோன்ற கதை சொல்வார்கள். இப்படி டாஸ்மாக் கடைக்கு வந்து சேர்ந்த தங்கத்துக்கும் ஜெயலலிதா புள்ளிவிவரங்கள் தர வேண்டும். ‘எங்களுக்கு இலவசங்கள் எதுவும் வேண்டாம், இந்த சாராயக் கடைகளை ஒழித்தால் போதும்’ என்று இன்னொரு பெண் சொன்னார். இலவசத்துக்கும் சாராயக் கடைக்கும் என்ன முடிச்சு போடுகிறீர்கள் என்று கேட்டபோது, ‘சாராயக் கடையில் வரும் வருமானத்தில்தான் இலவசங்கள் தருவதாக முதலமைச்சர் சொல்கிறார், அதனால் அது வேண்டாம்’ என்றார். இலவசங்கள் வேண்டாம் என்று சொல்ல தமிழக மக்களுக்கு விதவிதமான வாழ்வாதார காரணங்கள் இருக்கின்றன. தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2011 - 2012ல் 1,64,552 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,63,228 பேர் பயன்பெற்றனர். 2011 - 2012ல் டாஸ்மாக் விற்பனை ரூ.18081 கோடியே 16 லட்சம். இந்த நிதியாண்டில் தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை வெறும் ரூ.620 கோடி. தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2012 - 2013 நிதியாண்டில் 1,66,687 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,19,684 பேர் பயன்பெற்றனர். இதே நிதியாண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.21680 கோடியே 67 லட்சம். தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.701 கோடியில் ரூ.589 கோடிதான் செலவிடப்பட்டது. தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு 2013 - 2014க்கும் ரூ.701 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டின் டாஸ்மாக் வருமான விவரம் மார்ச் மாதத்துக்குப் பிறகு தெரியவரும். ஜெயலலிதா அரசு தமிழக மக்களுக்கு தாலிக்கு தங்கமாக தருவதற்கும் தங்கத்துக்கு சாராயமாக தருவதற்கும் இடையில் சில பத்தாயிரம் கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது. ‘பொன்மனச் செம்மல், இதயதெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்’ என்று அழைக்கப்படுகிற எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி யில் 1983ல் அரசு சாராயம் கொள்முதல் செய்ய டாஸ்மாக் உருவாக்கப்பட்டது. 2003 நவம்பரில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சாராய விற்பனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. 2003 - 2004ல் ரூ.3,639 கோடியே 92 லட்சமாக இருந்த டாஸ்மாக் விற்பனை 2012 - 2013ல் ரூ.21,680 கோடியே 67 லட்சமாக வளர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 700% வளர்ச்சி. 2003 முதல் 2012 வரை ஒவ்வோர் ஆண்டும் ரூ.1200 கோடி முதல் ரூ.3100 கோடி வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இடையில் எந்த கட்டத்திலும் விற்பனையில் பின்னடைவே இல்லை. மொத்தமுள்ள 6,837 கடைகளில், 4,631 கடைகளில் மட்டுமே அரசு அனுமதியு டன் பார்கள் இயங்குகின்றன. உரிமம் இன்றி செயல்படும் இந்த பார்களை முறைப்படுத்தினால் அரசுக்கு இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும். காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோட - திரு மேனி செழித்த தமிழ்நாடு! பாரதிக்குத்தான் எவ்வளவு பெருமிதம். இந்த எல்லா ஆறுகளும் இன்று வற்றிவிட்டாலும் வற்றாத ஜீவநதியான டாஸ்மாக் மூலம் தமிழ்நாட்டின் பெருமையை கட்டிக்காக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் 11 அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 6 பீர் உற்பத்தி நிறுவனங்கள், ஒரு ஒயின் உற்பத்தி நிறுவனம் இருப்பதாக தமிழக அரசு விவரங்கள் தருகிறது. இந்த நிறுவனங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சாராயம் விற்கின்றன. அரசின் நாகரிக வார்த்தைகளில் சொல்வதென்றால், அரசு இந்த நிறுவனங்களிடம் இருந்து சாராயம் ‘கொள்முதல்’ செய்கிறது. இவை, சசிகலாவின் மிடாஸ் உட்பட அஇஅதிமுக மற்றும் திமுக பிரமுகர்களால் நடத்தப்படுபவை. இந்த நிறுவனங்களிடம் இருந்து சாராயம் வாங்க மக்கள் பணம்தான் தரப்படுகிறது. தமிழ்க் குடிமக்கள் அதை வாங்கிக் குடித்து மீண்டும் அரசுக்கு பணம் சேர்க்கிறார்கள். ஆக, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருமானம் வருவதாகச் சொல்வது பொருந்தாதது. பொய்யானது. விலையில்லா பொருட்கள் திட்டங்களுக்கும் டாஸ்மாக் வருமானத்துக்கும் சம்பந்தம் இல்லை. அரசு மீண்டும் சாராயம் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு ஆகும் பெரும் செலவு போக ஊழியர் ஊதியம் தர வேண்டும். நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட வேண்டும். கூடுதல் இருப்பு வாங்கி வைத்து பழையவற்றை விற்கும் நடைமுறையும் இருப்பு தேங்கியிருப்பதும் டாஸ்மாக் கடைகளில் சாதாரணமான நிகழ்வுகளே. இந்த வகையில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.2,465 கோடி நட்டம் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் தமிழக அரசு சாராய உற்பத்தி நிறுவனங்களின் சந்தை முகவராக செயல்படுகிறது. 2011 ஜ÷லை, 2012 செப்டம்பர் என இரண்டு முறை சாராய விலை ஏற்றப்பட்டதும் தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கேட்டதால்தான். மது வகை, அவற்றை விற்கும் நிறுவனங்கள் பட்டியல், நிறுவனங்கள் வாரியாக விற்கப்படும் அளவு என பல விவரங்கள் சொல்லும் டாஸ்மாக் இணையதளத்தில் கொள்முதல் விலை பற்றிய விவரம் மட்டும் இல்லை. தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்தக் கடைகள், தங்கள் சொந்த ஊழியர்கள், தங்கள் சொந்த விற்பனை என செய்ய வேண்டிய வேலைகளை அரசே செய்து தருகிறது. லாபம் பார்ப்பது தனி யார் நிறுவனங்கள்தானே தவிர அரசு அல்ல. மொத்த இயக்கப்போக்கிலும் அரசுக்கு நிற்பது வெகு சொற்பமே. உதாரணமாக, ரூ.18,081 கோடி விற்பனை நடந்த ஆண்டில், அரசுக்கு ரூ.1,400 கோடி லாபம் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சொல்கிறார். (இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஏழைத் தமிழா....?) பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் கொள் முதல் விலை கேட்டுப் போராடுகிறார்கள். பிறகு போராட்டத்தை விலக்கிக் கொள்கிறார்கள். போராட்டத்தை விலக்கிக் கொள்ளக் காரணம் ஆளும் கட்சிக்காரர்களின் மிரட்டல் என்கிறார்கள். கோமாரி நோயால் பாதிக்கப்படக் கூடிய ஆடு மாடுகளை தமிழ்நாட்டின் வறிய பெண்களுக்கு விலையில்லாமல் வழங்குவதை வெண்மைப் புரட்சி என்று ஜெயலலிதா சொல்கிறார். பால் தேவைக்கு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் வழங்கும் பால் போதாமல் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை மக்கள் வாங்குகிறார்கள். 2013 டிசம்பரில் கொள்முதல் விலையை உயர்த்தியதால் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் விலை ஏறியது. ஏற்கனவே, அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழக மக்களுக்கு தரப்பட்ட முதல் பரிசான, பால் விலை உயர்வையே இன்னும் சமாளிக்க முடியாமல் திண்டாடும்போது, இன்னும் ஓர் விலைஉயர்வு திண்டாட வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் சாராய உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் அரசு சாராயம் வாங்கும்போது, ஏன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்யும் ஒன்றரை கோடி லிட்டர் பாலையும் வாங்கிவிட முடியாது? அப்படி வாங்கினால்தானே அதை வெண்மைப் புரட்சி என்று சொல்ல முடியும்? அய்ஸ்க்ரீம் வாங்க முப்பது ரூபாய் செலவழிப்பவர்கள் அரிசி வாங்க செலவழிக்கக் கூடாதா என்று சிதம்பரம் கேட்டதைப் போல், சாராயம் வாங்க ரூ.90 செலவழிப்பவர்கள், பால் வாங்க ரூ.20 செலவழிக்கக் கூடாதா என்று ஜெயலலிதா கேட்டாலும் வியப்படைய ஏதுமில்லை. இருவரும் நவதாராளவாதக் கொள்கைளுக்குச் சொந்தக்காரர்களே. எப்படியாயினும், தமிழ் நாட்டில் இன்றைய நிலைமைகளில் சாராயப் புரட்சி தவிர வேறேதும் நடப்பதாக தமிழக மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தாலிக்கு தங்கம் திட்டம், ஜெயலலிதா சொல்கிற வெண்மைப் புரட்சி ஆகியவற்றை டாஸ்மாக் ஓட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிப்படுகிற படுபாதகமான நிலைமைகள் தான் ஜெயலலிதா அரசாங்கம் நிறைவேற்றுவதாகச் சொல்லப்படுகிற மற்ற ‘மக்கள்நலத்’ திட்டங்களுக்கும் பொருந்தும். பேருந்துக் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என அவர் தந்திருக்கிற தொடர்ச்சியான அதிர்ச்சிகளின் தாக்கத்தால் வேதனை மேலிட்ட தமிழக மக்களுக்கு, சாராயம் அதிர்ச்சி நிவாரணி ஆகாது. அஇஅதிமுக ஆட்சியாளர்களின் இந்த விஷ விளையாட்டில், அரசுக்கும் ‘தமிழ்க்குடி’ மக்களுக்கும் இடையில் இசகுபிசகாகச் சிக்கிக் கொண்டவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள். செங் கொடி சங்கங்களில் இருக்கிறார்கள். காலமுறை ஊதியம் இல்லை, வார விடுமுறை இல்லை, 8 மணிநேர வேலை இல்லை, மிகைநேரப் பணிக்கு மிகை ஊதியம் இல்லை, அனைத்துக்கும் மேல் பணியிடத்தில் பாதுகாப்பு இல்லவே இல்லை, அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் தொல்லை, மிரட்டல் என அவர்கள் துன்பப்பட்டியல் முடிவின்றி நீள்கிறது. 2003ல் 36,000 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் எண்ணிக்கை 29,000 என குறைந்து உள்ளது. விற்பனையும் கடைகளின் எண்ணிக் கையும் அதிகரித்ததற்கு ஏற்ப ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. சமீபத்தில் குன்னூரில் தங்கள் மாநில மாநாட்டை நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடத்தில் ஏற்படுகிற மனஉளைச்சலால் இதுவரை தமிழகம் முழுவதும் 4,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகச் சொல்லியுள்ளனர். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிறீர்களே, அந்த வேலைவாய்ப்பை நம்பி இருக்கும் அந்த 29,000 ஊழியர் குடும்பம் நிலை என்ன என்று ஜெயலலிதா அக்கறை கொண்ட வர் போல் கேட்கலாம். அந்த 6,837 கடைகளையும் அரசின் மலிவு விலை உணவகங்களாக மாற்றி அவர்களுக்கு அங்கேயே கவுரவமான வேலை தரலாம். பிப்ரவரி 7 அன்று காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் விற்பனை இலக்கை தாண்டியது. பிப்ரவரி 8 அன்று வண்டலூரில் மோடி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. ஆளும் வர்க்கக் கட்சிகளின் பெரிய கூட்டங்கள் நடக்கும்போது டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடக்கிறது. மதுவிலக்கு வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிற பாட்டாளி மக்கள் கட்சி கூட்டங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் இன்னும் ஒரு படி மேலேபோய், டாஸ்மாக் கடைக்கு போன கையோடு அருகில் இருக்கிற தலித் கிராமத்துக்குச் சென்று தாக்குதலும் நடத்திவிடுவார்கள். இதுபோன்ற கூட்டங்கள் தவிர பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விற்பனை இலக்கை தாண்டுகிறது. சாதாரண நாட்களிலும் இலக்கு எட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் தொய்வின்றி நடக்கும் ஒரே விற்பனை டாஸ்மாக் விற்பனை. கரும்புக்கும் நெல்லுக்கும் கூடுதல் கொள்முதல் விலை கேட்டு விவசாயிகள் போராட்டங்கள் நடத்துவதுபோல், தங்கள் நிறுவன சாராயத்தை அரசு வாங்கவில்லை என்று சிலர் நீதிமன்றக் கதவுகளை தட்டுவது வரை டாஸ்மாக் விற்பனை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ‘குடி’யரசு தழைத்தோங்குகிறது. தோளில் இருந்து சரிகிற சிவப்புத்துண்டை சரிசெய்துகொண்டே அந்தத் தோழர் சொன்னார்: ‘டாஸ்மாக் கடை இல்லை என்றால் நமது ஆண்கள் சாராயம் குடிக்க கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் செல்வார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும்’. ‘தமிழ்க்குடிமக்கள்’, பிற மாநிலங்களை நம்பியிருக்காமல் சொந்தக் காலில் நிற்க வைப்பதுதான் எவ்வளவு பெருமைமிகு செயல்! ‘தமிழ்க்குடிமக்கள்’ மீது, அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அக்கறையை எப்படித்தான் மெச்சுவது! சிக்கன் ஒரு துண்டு கூட எடுத்துவிட்டார் என்பதற்காக தனது நண்பனையே அடித்துக் கொன்றார் ஒரு ‘குடி’மகன். குடித்துவிட்டு துன்புறுத்திய கணவனை மனைவி, தந்தையை மகன், அண்ணனை தம்பி, மகனை தாய் அல்லது தந்தை கொலை செய்த செய்திகளும் வந்து கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன ஜெயலலிதா, உணர்ச்சிப்பெருக்கில் கொலைகள் நடப்பதை தடுக்க முடியாது என்று சொன்னார். மேலே குறிப்பிடப்பட்ட கொலைகளுக்கு முழுக்கமுழுக்க தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் ஏற்படுத்திய உணர்ச்சிப்பெருக்குதான் காரணம். எனக்கு குடும்பம் இல்லை, தமிழக மக்கள்தான் எனது குடும்பம் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா என்கிற முதலமைச்சர் தனது ஆட்சியில் இருக்கும் மக்களாகிய குடும்பத்துக்கு சாராயம் கொடுத்துத்தான் சீரழிப்பாரா? தனக்குத் தேவையான சீனப் பொருட்களுக்கு மிகக் கூடுதல் விலை கொடுக்க நேர்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சீனத்தை, கிழக்கிந்திய கம்பெனி உற்பத்தி செய்த அபினியால் அடித்தது. சீனத்துக்குள் அபினியை விற்று சீன மக்களை அபினி மயக்கத்தில் தள்ளியது. போதைக்கு அடிமையாகி, தங்களிடம் இருந்த வெள்ளியை, தங்கத்தை விற்று, அடகு வைத்து, கடன்பட்டு, முற்றிலும் திசை மறந்தவர்களாக அவர்களை மாற்றியது. இந்தியாவில் இருந்த தனது படைகள் கொண்டு, சீன கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்து தனது வர்த்தகத்துக்கு பயன்படுத்திக் கொண்டது. ஆயினும் சீன மக்கள் நிரந்தரமாக அபினி மயக்கத்திலேயே இருந்துவிடவில்லை. பிறிதொரு நாள், கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்தார்கள். ஜெயலலிதாவும் தமிழக மக்களை நீண்ட காலத்துக்கு டாஸ்மாக் மயக்கத்தில் ஆழ்த்தி வைக்க முடியாது. வாக்களித்த மக்களுக்கு விஷமளித்து, அவர்கள் துன்பத்தில் சாவதை வேடிக்கைப் பார்க்கும் அஇஅதிமுகவுக்கு தக்க பாடம் தர காலம் நெருங்குகிறது.

...Full Text

முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளருக்கு இந்நாள் கொள்கை பரப்புச் செயலாளர்கள்

ஜெயலலிதா அரசியல் அரிச்சுவடி அறியாதவரல்ல இன்று தமிழக முதல்வராக, அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருக்கிற ஜெயலலிதா, 04.06.1982ல் அஇஅதிமுகவில் சேர்ந்தார். ஜனவரி 1983ல் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார். எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, பல சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்த அவரால், மூன்று முறை முதல்வராகவும் முடிந்தது. ஆக, ஜெயலலிதா அரசியலில் ஒரு நீண்ட அனுபவம் பெற்றுள்ளார். மாநில அரசியல், அகில இந்திய அரசியல் ஆகிய இரண்டைப் பற்றியும், ஜெயலலிதா என்ற அரசியல்வாதிக்கு, அவரது அரசியல் கட்சிக்கு நிச்சயமாய் ஒரு பார்வை இருக்கிறது. ஒரு கட்டத்தில், தமிழக அரசியலில், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அஇஅதிமுக ஜெயலலிதா, ஜானகி பிரிவுகள் என இரண்டாக உடைந்தது. ஜானகி தலைமையிலான ஆட்சி கலைந்த பிறகு நடந்த தேர்தலில், தமிழ்நாட்டில், கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா, ஜானகி என்ற நான்கு பேர் முதல்வர் வேட்பாளர்களாகக் களத்தில் இருந்தனர். ஜெயலலிதா 2014ல் ஒரு கணக்கு போடுகிறார். காங்கிரஸ் நிச்சயம் தோற்றுப் போகும். இந்தியா முழுவதிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை உள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் தானே காங்கிரஸின் முதன்மை எதிர்க்கட்சி என்ற பிம்பத்தைக் கட்டி அமைப்பதில் மிகவும் தெளிவாக உள்ளார். காங்கிரஸ் வீழ்ச்சி பாஜகவின் எழுச்சியாக நேரடியாக மாறுமா என்ற சந்தேகம் அவருக்கும் உள்ளது. 2014 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பாஜக மற்ற கட்சிகளின் ஆதரவை நாடலாம். இது ஒரு சாத்தியப்பாடு. மற்றுமொரு சாத்தியப்பாடு, காங்கிரஸ் - பாஜக அல்லாத கட்சிகள் கணிசமான இடங்கள் பெறுவது. அப்போது, அந்தக் கட்சிகளில் ஏதாவது ஒன்றிலிருந்து பிரதமர் வரவும், அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஜெயலலிதா, தாமே பிரதமராக வாய்ப்பு உள்ளது எனத் திட்டவட்டமாக அடித்துச் சொல்லாமல், அடுத்து அமைய உள்ள மத்திய அரசில் தமக்குப் பெரும் செல்வாக்கு இருக்கும் என்பதையே சொல்கிறார். பாவம் சிபிஅய் தோழர்கள். சிபிஅய் கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் தோழர் ஏ.பி.பரதன் இப்போதைய செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு, தோழர் ஏ.பி. பரதன், தங்களது கூட்டணி வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்புக்கள் இயற்கையாகவே உருவாகும் என்றார். மறுநாள் சிபிஎம் முறை வந்தது. தோழர்கள் பிரகாஷ்காரத் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். இரண்டு பேருமே தேர்தல்களை கூட்டாகச் சந்திக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்கள். (தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசவில்லையாம்! தொகுதிப் பங்கீடு பற்றி சிபிஅய் சிபிஎம்மால் ஜெயலலிதாவிடம் பேச முடியும் என சிபிஅய் சிபிஎம்மே நினைக்க முடியாது. ஏற்கனவே து.ராஜாவுக்கு ஒன்று டி.கே.ரங்கராஜனுக்கு ஒன்று என நாடாளுமன்ற மேலவை இடங்கள் தரப்பட்டுவிட்டன. அதையும் கவனத்தில் கொண்டே ஜெயலலிதா முடிவு செய்வார்). இந்த அறிவிப்பு வெளியிடப் படும்போது, ஜெயலலிதா சொன்னார்: “ஒரு விஷயத்தை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அடுத்த பிரதமர் யார் என்று விவாதிப்பதற்கு இது சரியான நேரம் இல்லை. யார் பிரதமர் என்று எந்த ஒரு அரசியல் கட்சி விவாதிப்பதும் பொருளற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே அது குறித்து விவாதிக்க முடியும்.” பாவம், அம்மாவின் விவரம் இல்லாத விசுவாசிபோல் பேசியதற்கு, சிபிஅய் தேசிய செயலாளர் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தார் ஜெயலலிதா. தோழர் பாண்டியன், மோதிரக் கையால் குட்டுப்பட்டது பாக்கியம் என்று சொல்லவும் கூடும். ஏனெனில் அவர், யாருடைய ஆதரவில் ஜெயலலிதா பிரதமர் ஆனாலும், அது நாட்டிற்கு நல்லது என்று சொன்னவர் அல்லவா! அஇஅதிமுக சிபிஎம் அறிவிப்பு நடந்த நேரத்தில் வேறொரு சுவையான விசயம் நடந்தது. ஒரு கேள்விக்கு மிகமிகப் பொருளுள்ள ஒரு பதிலை (!) ஜெயலலிதா தந்ததை, தீக்கதிர் 03.02.2014 அன்று முதல் பக்கத்தில் பிரசுரம் செய்திருந்தது. உங்களுக்கும் நரேந்திர மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது என ஒரு நிருபர் கேட்க, ஜெயலலிதா, “இந்தச் செய்தியாளர் சந்திப்பு, கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கானது. இதில் வேறு கேள்வி எதற்கும் பதில் இல்லை. மற்ற பிரச்சனைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” எனப் பதில் சொன்னார். தேர்தலுக்கு முந்தைய உடன்பாடு பற்றித்தான் பேச்சு என்றும், தேர்தலுக்குப் பின் என்ன என்பதை தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம் என்றும் சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில், பளிச் எனச் சொல்கிறார். மோடி, மதவெறி பற்றி எல்லாம் அவர் எதுவும் பேசவில்லை. அவர் தெளிவாக உள்ளார். அவர் எந்தக் காயை ஆடவும் எந்தக் காயை வெட்டவும் தயாராக இருப்பதைத் தெளிவாக்குகிறார். மோடி தொடர்பாக இதுவரை எந்த எதிர்மறைக் கருத்தையும் அவர் சொல்லாமல் இருக்கிறார். சிபிஅய், சிபிஎம் தோழர்கள் ஜெயலலிதாவிற்கு வாக்கு கேட்கும்போது, மறைமுகமாக, அதில் மோடிக்கும் வாக்கு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்பதை, உணர வேண்டும். சிபிஎம், ஜெயலலிதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் என்று சொல்வது, மிகையான பொருத்தமற்ற விமர்சனமா? தோழர் மாவோ, விவரங்களிலிருந்து உண்மையைக் கண்டறியச் சொல்கிறார். (SEEK TRUTH FROM FACTS). அஇஅதிமுக தனக்கு இரண்டு தளங்கள் இருப்பதாக நாடகமாடுகிறது. (1) வறியவர் ஆதரவு (2) மாநில உரிமைகளிலிருந்து மத்திய அரசு எதிர்ப்பு. ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தலிலேயே, தோழர் ராமகிருஷ்ணன், அஇஅதிமுக நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களுக்காக அதற்கு வாக்களிக்கக் கோரியதன் மூலம், அஇஅதிமுகவின் வறியவர் ஆதரவு நிலைக்கு வக்காலத்து வாங்கினார். மாநில உரிமைப் போராளி மத்திய அரசு எதிர்ப்பாளி என்ற பிம்பத்தை அஇஅதிமுகவிற்கு உருவாக்குவதில், சிபிஎம் எவ்வளவு கண்ணும் கருத்துமாய் உள்ளது என்பதை தீக்கதிரில் வெளிவந்துள்ள சிபிஎம் சட்டமன்றத் தலைவர் தோழர் சவுந்தர் ராஜன், துணைத் தலைவர் பாலபாரதி பேசிய விஷயங்களிலிருந்து காணலாம். “மனித வளக்குறியீடுகள், மாநில வளர்ச்சிக் குறியீடுகள் ஆகியவை ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் மிகச்சிறந்த வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது என்று ஆளுநர் அறிக்கை விவரமாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரு மாநிலம் வளர்ச்சிக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டால், அந்த மாநிலத்தை விவசாயத் துறையில், தொழில் துறையில், கல்வித் துறையில், மகளிர் மற்றும் சமூக நலத்துறையில் எப்படி ஊக்குவிக்கலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக வளர்ச்சி அடைந்த மாநிலமா, நன்றாக செயல்படுகிற மாநிலமா தண்டித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டதைப் போல நிதிக் குழுவும் மத்திய அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம் சிறப்பாக இருக்கிறது என்ற காரணத்திற்காக நமக்கு நிதிப் பங்கீட்டை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என்பது ஆளுநர் உரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எல்லாவற்றையும் தலைகீழாகப் பார்க்கிற பார்வையாகும். வளர்ச்சி குன்றிய அல்லது போதுமான வளர்ச்சியை எட்டாத மாநிலங்களுக்கு கூடுதலான சலுகையை தரவேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் வளர்ச்சி அடைகிற மாநிலங்களை ஊக்குவிப்பது என்பதும் அவசியமாகும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இது நடைபெறவில்லை, குறிப்பாக நம் தமிழகம் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. நிதி பங்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய அரசமைப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றும்; மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்கிற அரசை அமைப்பதில் அதிமுகவுடன் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து செயல்படும்.” இவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் தோழர் அ.சவுந்தரராஜன் கூறிய விசயங்களாகும். பல்வேறு பிரிவு மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணும் தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்டுகிற மாநிலமாக இருக்கிறதேயன்றி, மதவெறி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் மோடியின் குஜராத் அல்ல என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் கே.பாலபாரதி கூறினார். தோழர் அ.சவுந்தரராஜன், தொழிலாளர்களின் வேலையைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறபோது, மூன்று நாட்கள் தொழிலாளர் துறை இரவு பகலாக வேலை செய்ததை தான் அருகில் இருந்து பார்த்ததாகச் சொல்கிறார். சிறப்பாக தொழிலாளர்துறை செயல்பட்டு அந்தத் தொழிலாளர்களின் வேலை பாதுகாக்கப்பட்டது என்றும் பல தொழிற்சாலைகள் இங்கே வருகின்றன என்றும் சொன்னார். அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேசை தட்டுவதில் கின்னஸ் சாதனை படைத்தவர்கள் படைப்பவர்கள் என்றால், அம்மா அம்மா பெரியம்மா நீங்கதாம்மா எல்லாம்மா என்ற பக்திப் பாடலுக்கு சவுந்தர்ராஜனும் பாலபாரதியும் எப்படி மெய்மறந்து பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள்! ஆனாலும் சவுந்தர்ராஜன் அவர்களே, தமிழகத் தொழிலாளர்களால் வெறுக்கப்படும் தொழிலாளர் துறையை, உங்களால் எப்படிப் போற்றிப் புகழ முடிந்தது என உண்மையிலேயே புரியவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விசயங்கள், தமது கட்சிக்கு வெளியிலிருந்து அதுவும் இடதுசாரி முகாமிலிருந்தே தமக்கு நற்சான்றிதழ்கள் வருகின்றன என்று ஜெயலலிதா காட்டிக்கொள்ளும் விதத்தில், நமது தோழர்கள் அவரது கொள்கை பரப்புச் செயலாளர்களாக எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பதைப் புலப்படுத்தும். தேர்தல் உடன்பாடுகளும் சிபிஅய், சிபிஎம் கட்சிகளின் சந்தர்ப்பவாதத் தவறுகளின் வரலாறும் 1967ல் திமுக அண்ணாதுரை தலைமையில் தேர்தலைச் சந்தித்தபோதே, வலதுசாரி சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து சிபிஎம் அக்கூட்டணியில் இடம் பெற்றது. சிபிஅய் தனித்துப் போட்டியிட்டது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி போட்டியிட்ட 20 இடங்களில் 6 இடங்களிலும் சிபிஎம் போட்டியிட்ட 11 இடங்களில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறி அஇஅதிமுக உருவாக்கினார். கேப்பிடலிசம் சோசலிசம் எல்லாவற்றையும் புட்டியில் போட்டுக் குலுக்கி எடுத்து அற்புதமான அண்ணாயிசம் கண்டுபிடித்தார். அந்த நேரத்திலேயே சிபிஅய்யின் பாலதண்டாயுதம் ஊழலை லஞ்சத்தை எதிர்க்கும் எம்ஜிஆர் மீது ஒரு துரும்பு ஒரு கீறல் பட்டாலும், ஒரு திமுக மந்திரி கூட தமிழ் நாட்டில் உயிரோடு நடமாட முடியாது என்ற எச்சரிக்கையைப் பிரகடனம் செய்தார். எம்ஜிஆர் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தியபோது, அவரிடம் கொள்கையும் திட்டமும் தெளிவாக இல்லை எனச் சொல்லி தோழர் பி.சங்கரய்யாவை வேட்பாளராக நிறுத்திய சிபிஎம், எம்ஜிஆர் தோழர் பி.இராமமூர்த்தியை சந்தித்த பிறகு, தனது வேட்பாளரை விலக்கிக் கொண்டு, அஇஅதிமுகவை ஆதரித்தது. அவமானகரமான அபத்தக் களஞ்சியமான அண்ணாயிசத்தைச் சீர்செய்ய, தீக்கதிரில் 5 அல்லது 6 தொடர் கட்டுரைகள் மூலம் ஆலோசனை வழங்கினார்கள். அப்போதே, கேப்பிடலிசத்தையும் சோசலிசத்தையும் இணைப்பவரின் ஆலோசகர் வேலையை வலியச் செய்தனர். நெருக்கடி நிலைக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் 1977ல் வந்தது. அஇஅதிமுக சிபிஅய், இ.காங்கிரஸ் ஓர் அணி. திமுக, ஜனதா, சிபிஎம் வேறு அணியில் நின்றார்கள். அதிமுக 18, இ.காங்கிரஸ் 15 சிபிஅய் 3ல் வென்றன. ஜனதாவிற்கு 3ம் திமுகவிற்கு ஓரிடமும் கிடைத்தன. திமுக மீதான ஊழலை விசாரிக்க சர்க்காரியா ஆணையம் அறிவிக்கப்பட்ட பிறகும், சிபிஎம் திமுகவுடன் தேர்தலைச் சந்தித்தது. 1977லேயே சட்டமன்றத் தேர்தல்கள் வந்தன. சிபிஎம், பல்ட்டி அடித்து அஇஅதிமுக அணிக்குச் சென்றது. அதற்குப் பின்வரும் காரணம் சொன்னது. “மக்களவைத் தேர்தல் என்பது சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடந்த போட்டி. ஆனால் சட்டமன்றத் தேர்தல் அப்படியான பிரச்சனையை முன் வைத்து நடக்கவில்லை. திமுக ஆட்சி செய்த தவறுகளை 1969 ஆம் ஆண்டிலிருந்தே மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டி வருகிறது. தவிரவும், திமுகவின் முக்கியத் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது சர்க்காரியா கமிஷன் விசாரணை செய்து கொண்டிருக்கும்போது, திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட மார்க்சிஸ்ட்கள் உடந்தையாக இருக்க முடியாது.” நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஊழல் பிரச்னை கிடையாது! சட்டமன்றத் தேர்தலுக்கு ஜனநாயகம் பிரச்சனை கிடையாது! ஆஹா பிரமாதம். 1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இ.காங்கிரஸ் கூட்டணி வென்றது. அஇஅதிமுக ஜனதா சிபிஎம் கூட்டணி அமைத்தன. சட்ட மன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான 14 கட்சி கூட்டணியில், சிபிஅய், சிபிஎம் இடம் பெற்றன. அக்டோபர் 31, 1984ல் இந்திரா கொல்லப்பட்டார். 1984 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. சட்டமன்றத் தேர்தலும் கூடவே நடந்தது. சிபிஅய், சிபிஎம், திமுக, ஜனதா கூட்டணியில் இருந்தன. இரண்டிலும் அஇஅதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. 24.12.1987ல் எம்ஜிஆர் இறந்த பிறகு அஇ அதிமுக, ஜெயலலிதா ஜானகி அணிகளாகப் பிரிந்தது. நான்கு முதல்வர் வேட்பாளர்களோடு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சிபிஅய் ஜெயலலிதாவுடனும் சிபிஎம் திமுக ஜனதாவுடனும் சேர்ந்தன. கருணாநிதி முதல்வரானார். 1989 நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, சிபிஅய், சிபிஎம் ஓரணியில் நின்றன. அஇஅதிமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி நாகப்பட்டினம் தவிர அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. அகில இந்திய அளவில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி 141 இடங்களையும் இந்திரா காங்கிரஸ் 192 இடங்களையும் பாஜக 88 இடங்களையும் கைப்பற்றின. தேசிய முன்னணி ஆட்சி அமைக்க, ஒரு பக்கம் சிபிஅய் சிபிஎம்மும், மறு பக்கம் பாஜகவும் ஆதரவு தந்தனர். ராஜீவ் காந்தி மே 91ல் இறந்தார். ஜூன் 91 நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி வென்றது. திமுக சிபிஅய், சிபிஎம் கூட்டணி தோற்றது. காங்கிரஸ் தலைமையில் நரசிம்மராவ் பிரதமராக, சிறுபான்மை அரசு, மத்தியில் 21.06.1991ல் வந்தது. 1996ல் திமுக, சிபிஅய், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உருவானது. சிபிஎம், மதிமுக தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றது. தோழர் சுர்ஜித் தமது கூட்டணி வென்றால் வைகோ தான் முதல்வர் என அறிவித்தார். வைகோ, சுர்ஜித்தில் பெரியாரை காண்பதாக உருகினார். தொங்கு நாடாளுமன்றம் வந்தது. பாஜக 154, காங்கிரஸ் 140 இடங்கள். 16.05.1996 முதல் வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமரானார். 01.06.1996ல் தேவகவுடா, அய்க்கிய முன்னணி பிரதமரானார். அய்மு, இடது முன்னணி ஒருங்கிணைப்பு ஏற்பட்டது. சிபிஅய்யின் இந்திரஜித் குப்தா சதுரானன் மிஸ்ரா மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். சிபிஎம் வெளியில் இருந்து ஆதரிப்பது தாண்டி, ஒருங்கிணைப்பின் மூலம் நேரடியாக அல்லாத விதத்தில் ஆட்சியில் அங்கம் வகித்தது. 21 ஏப்ரல் 1997ல் குஜ்ரால் பிரதமராகி, பிறகு அந்த ஆட்சியும் அற்பாயுசில் கவிழ்ந்தது. 1998 பிப்ரவரியில் மக்களவைத் தேர்தல் வந்தது. அஇஅதிமுக, மதிமுக, பாமக, பாஜக கூட்டணி உருவானது. திமுக, தமாகாவுடன் சிபிஅய் கூட்டணி சேர்ந்தது. சிபிஎம் வடசென்னையில் மதுரையில் தனித்துப் போட்டியிட்டு, மற்ற இடங்களில் திமுக கூட்டணியை ஆதரித்தது. பாஜக 179 காங்கிரஸ் 142 இடங்கள் பெற, பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்து 13 மாதங்கள் ஓடியது. 99ல் அஇஅதிமுக ஆதரவை வாபஸ் வாங்க, மீண்டும் தேர்தல் வந்தது. அஇஅதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைக்க, அதில் சிபிஅய், சிபிஎம் சேர்ந்தனர். திமுக, பாஜக, மதிமுக, ராஜீவ் காங்கிரஸ், பாமக கூட்டணி அமைத்தனர். மூன்றாவது அணியாக தமாக விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் களம் இறங்கினர். தமிழ்நாட்டில் பாஜக, திமுக கூட்டணி 24 இடங்கள் வென்றன. 182 இடங்கள் வென்று, பாஜக “இந்தியா ஒளி வீசும்” ஆட்சி நடத்தியது. 2004ல் பாஜக, அஇஅதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சிபிஅய், சிபிஎம் இடம் பெற்று எல்லா இடங்களையும் வென்றனர். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஅய், சிபிஎம் கூட்டணி வென்று கருணாநிதி முதல்வரானார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் 39ல் 27 இடங்களையும், புதுச்சேரி தொகுதியையும் வென்றனர். அஇஅதிமுக, மதிமுக பாமக, சிபிஅய், சிபிஎம் மூன்றாம் அணியாய் நின்றனர். அஇஅதிமுக 9 இடங்கள், மதிமுக, இகக, இககமா தலா 1 இடமும் வெற்றி பெற்றன. பாமக ஓரிடம் கூட வெற்றி பெறவில்லை. படிக்கும் போதே மூச்சு வாங்குகிறதா? சிபிஅய், சிபிஎம் கட்சிகள் நோகாமல், இந்தத் தாவல்களை, பல்ட்டிகளை, பாய்ச்சல்களை நடத்திவிட்டனர். இந்தப் பின்னணியில் சிபிஅய், சிபிஎம் ஜெயலலிதாவோடு 2014 தேர்தலுக்குக் கூட்டு சேர்வதைக் காண வேண்டும். புரட்சி, சமூக மாற்றம் என்பவற்றிற்கும் சிபிஅய் சிபிஎம் தேர்தல் தந்திரங்களுக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது என்பது தெளிவு. தேர்தல் அல்லாத நேரங்களில் மற்றும் அதன் தொடர்ச்சியாக தேர்தல்களில், புரட்சிகர இடதுசாரி கட்சியின் நிலைப்பாடு எப்படி அமைய வேண்டும் என இகக (மாலெ) 9ஆவது காங்கிரஸ் ஆவணம் பின்வருமாறு சொல்கிறது. ‘நாம், சங்பரிவாரின் மதவெறி அரசியலில் இருந்து மட்டுமின்றி, கட்டற்ற அதிகாரம் மற்றும் சூறையாடலுக்காக பசியுடன் காத்திருக்கிற பெரும்தொழில் குழும உலகில் இருந்தும் இன்று மோடி தமது சக்தியை பெறுகிறார் எனப் புரிந்துகொள்ளும்போது, மோடி மாதிரிக்கெதிரான போராட்டத்தை வெறுமனே மதவெறி எதிர் மதச்சார்பின்மை வழிகளில் தொடர முடியாது என்பதை அங்கீகரித்தாக வேண்டும்; மாறாக அது உழைக்கும் மக்களின் பெரும்தொழில் குழும எதிர்ப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான தொடர் போராட்டங்களிலிருந்து பலம் பெற வேண்டும். மோடி முத்திரை அரசியலோடு பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ள மதவாத பயங்கரம், பெரும் தொழில்குழும மூலதனம், அரசு ஒடுக்குமுறை, ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதத்திற்கெதிரான போரின் ஒரு பகுதியாக இஸ்லாமியர்களை குற்றவாளிகளாகக் காட்டுவது ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை திறம்பட இணைப்பதன் மூலம்தான் மோடி மாதிரியை எதிர்கொள்ள முடியும். மக்களின் ஓர் அதிஉயர்ந்தபட்ச அறுதியிடலும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் சக்திவாய்ந்த தலையீடும் மட்டுமே, நாடு ஒட்டுமொத்தமாக பெரும்தொழில் குழும - பாசிச கையகப்படுத்தல் ஆபத்துக்கு ஆளாவதில் இருந்து காப்பாற்ற முடியும்’. ‘பெரும்தொழில்குழும-பாசிச தாக்குதலை எதிர்ப்பது, காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்கொள்வது என்ற மய்ய அரசியல் கடமை, வெவ்வேறு மாநிலங்களில் நிலவுகிற வேறு வேறு வகைப்பட்ட அரசியல் சூழல்கள் மற்றும் நிலைமைகளைச் சார்ந்து எழுகிற அந்தந்த மாநிலங்களுக்கு குறிப்பான அரசியல் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளோடு இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் பாஜக/தேஜமு அல்லது காங்கிரஸ்/அய்முகூ ஆகியவற்றால் நடத்தப்படுகின்றன. ஆக இந்த இரண்டு கூட்டணிகளுமே தேசிய அளவில் நமது பிரதான இலக்குகளாகும். இந்த இரண்டு கூட்டணிகளோடும் நேரடியாகத் தொடர்பில்லாத கட்சிகளால் நடத்தப்படுகிற மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தமிழ் நாட்டின் அஇஅதிமுக போன்ற அரசாங்கங்கள் சமஅளவுக்கு மோசமான மக்கள்விரோத, ஜனநாயக விரோத வரலாறு உடையவர்கள். ஆகவே நாம் இவர்களையும் ஊக்கத்துடன் எதிர்த்திட வேண்டும்’. தமிழ்நாட்டில் மோடியின் திருப்பணியை ஜெயலலிதாவே மேற்கொள்வதால் கம்யூனிஸ்ட்களின் முதன்மையான கடமை ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஆகும். அதற்காக, போராடுகிற இடதுசாரி ஜனநாயக தேசபக்த சக்திகளிடம், உழைக்கும் மக்களிடம் துணிந்தும், உரிமையோடும், ஆதரவு கேட்கவேண்டும். பாட்டாளி வர்க்க அரசியலின் செங்கொடியின் சுதந்திரத்தை உத்தரவாதம் செய்வதன் மூலம் வருங்கால தமிழகத்திற்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்.

...Full Text

ஜெயலலிதாவின் அரசியல் காய் நகர்த்துதலே ஏழு பேர் விடுதலை

உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசு முடிவுகள் 18.02.2014. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 19.02.2014. ஜெயலலிதா அமைச்சரவையைக் கூட்டி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும், அம்முடிவை மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தந்து அனுப்புவதாகவும், எது எப்படி இருப்பினும், மூன்று நாட்கள் முடிந்த பிறகு, அவர்களைத் தமிழக அரசு விடுதலை செய்யும் என்றும் தமிழகச் சட்டமன்றத்தில் அறிவித்தார். 20.02.02014. தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்யும் முடிவில், உச்சநீதிமன்றம் ஸ்டேட்டஸ் குவோ அனுசரிக்குமாறு, இடைக்கால உத்தரவிட்டது. அதாவது, விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் என்ன சொன்னார்கள்?. ராகுல் காந்தி, தமிழக அரசாங்கத்தின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும், முன்னாள் பிரதமருக்கே இந்நிலை என்றால் சாமான்ய மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என்றும் கோபம் மற்றும் விரக்தியின் கலவையை வெளிப்படுத்தினார். பாஜகவின் அருண் ஜெட்லி ராகுல் காந்தி சொன்னது போலவே பேசினார். காங்கிரஸ் பாஜக இருவருக்கும் மாற்று என்று சொல்லிக் கொள்ளும் ஆம்ஆத்மி யின் அர்விந்த் கெஜ்ரிவாலும், ஏழு பேர் விடுதலை தவறு என்றே சொன்னார். ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் நடக்கக் கூடாதது நடந்து விட்டதாகவும், ஏழு பேர் விடுதலை அஇஅதிமுக, திமுக போட்டி அரசியலின் மோசமான விளைவு என்றும், ஏதோ உயர்ந்த பீடத்திலிருந்து உபதேசம் செய்வதுபோல் பேசின. தி இந்து ஆங்கில நாளேடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏழுபேர் விடுதலை ஒரு தொடர்பு அகற்றுதலை (டிஸ்கனக்ட்) கொண்டு வந்துள்ளதாகத் தலையங்கம் தீட்டியது. திராவிட இயக்கம் துவக்க காலங்களில் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று தி இந்து நாளேட்டை விவரித்ததற்குப் பொருத்தமாகவே எழுதியது. தமிழ்நாட்டில், எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டன. எந்த ஓர் உண்மையான தமிழனும் தமிழச்சியும் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்வார்கள் என்பதாகவே பொதுக் கருத்து கட்டமைக்கப்பட்டது. தமிழ்நாடு பாஜக, தமிழ்நாடு ஆம்ஆத்மியின் கிறிஸ்டினா சாமி, ஆம்ஆத்மியின் புதிய கூட்டாளியாக மாறத் தயாராகும் உதயகுமார் ஆகியோரெல்லாம் ஏழு பேர் விடுதலையை வரவேற்றனர். தமிழ்நாட்டில் ஒரு நிலை, இந்தியாவில் ஒரு நிலை என எடுப்பதில் சங்கடமோ கூச்சமோ அவர்களுக்கு ஏற்படவில்லை. பிரபலமான தமிழ் தேசியவாதிகளுக்கு அம்மா போற்றி பாட, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா, கருணாநிதி இருவருமேஇரட்டை வேடம் போடுபவர்கள்தான் 2000த்திலேயே, தூக்கு தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனையை அரசியலமைப்புச் சட்டப்படி பரிசீலிக்க, கருணாநிதி அரசுக்கு வாய்ப்பு கிடைத்தது. கருணாநிதி அரசு, நளினிக்கு மட்டுமே ஆயுள் தண்டனை எனக் குறைக்கப் பரிந்துரை செய்தது. 23.10.2008ல் நமது எம்ஜிஆர் நாளேட்டில், ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா நளினியைச் சந்தித்தபோது, ஜெயலலிதா பின்வரும் பொருளில் அறிக்கை வெளியிட்டார்: நளினியை பிரியங்கா பார்த்தது சரியா? இது பிரியங்கா சோனியாவின் சொந்தப் பிரச்சனையா? இது அவர்களுடைய குடும்பப் பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டின் பிரச்சனை. இது முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பானது. இது இந்த நாட்டின் இறையாளுமைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை கருணாநிதி மரண தண்டனையில் இருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வருகிற போதொல்லாம் விடுதலை புலிகளுக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழகத்தில் பகிரங்கமாக நடக்கின்றன. என் ஆட்சியாக இருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன். 2008ல் ஜெயலலிதா சென்னது இருக்கட்டும். 2014ல் நளினி தன் 90 வயது தந்தை சங்கர நாராயணனைப் பார்க்க ஒரு மாதம் பரோலில் (சிறையிலிருந்து விடுப்பில்) செல்ல அனுமதி கேட்டபோது ஜெயலலலிதா அரசு என்ன சொன்னது? நளினியின் தந்தை இருக்கும் பகுதி மலைப்பகுதி. நளினியை தேர்தல் காலத்தில், அவர்கள் தந்தை இருக்கும் விக்கிரமசிங்கபுரத்துக்கு அனுப்பினால், பல தலைவர்கள் அவரைப் பார்க்கச் செல்வார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும். ஆகவே பரோல் கூடாது. (நளினியின் தந்தையும் அவர் வருவதை ஏற்கவில்லை என்றும்கூட சொல்லப்பட்டது). அக்டோபர் 2008ல் மட்டுமல்லாமல் ஜனவரி 2014லிலும் ஜெயலலிதா நளினியின் விடுதலைக்கெதிராக மட்டுமின்றி பரோலுக்கும் எதிராக இருந்தார். இப்போது 19.02.2014ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் கூடவே நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய அறிவிப்பு வெளியிடுகிறார். ஜெயலலிதாவின் 19.02.2014 முடிவில், கருணை, தமிழ் உணர்வு, ஜனநாயக அக்கறை என்ற எதுவும் இருப்பதாக, எவர் சொன்னாலும் அவர் ஒன்று ஏமாறுகிறார் அல்லது ஏமாற்றுகிறார். எம்ஜிஆர் ஒரு திரைப்பாடலுக்கு ஏமாறாதே ஏமாற்றாதே என வாயசைத்தது இப்போது நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தினால், நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. நடந்தது என்ன? தீர்ப்பு என்ன சொல்கிறது? வேறெங்கும் போகாமல் இணையதளத்தில் காணப்படும் 18.02.2014 தேதியிட்ட மாற்றப்பட்ட வழக்கு (குற்ற) எண்கள் 1, 2, 3/2012ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பு விவரங்களிலிருந்தே நடந்தவற்றைக் கண்டறியலாம். • வழக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் 72, 161 பிரிவுகள்படி முறையே குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர், மூவரின் கருணை மனுக்களைப் பரிசீலிப்பதில் தேவையற்ற அளவுக்கதிகமான கால தாமதம் செய்திருந்தனரா என்பது தொடர்பானதாகும். அப்படிச் செய்திருந்தால் அது அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர் வாழும் உரிமை தொடர்பான பிரிவு 21க்குப் புறம்பானதா? • 12.08.2011 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் மூவரை தூக்கிலிட உத்தரவிட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்ற வாதத்துடன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்கக் கோரப்பட்டது. • 1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். விசாரணை நீதிமன்றம் 28.01.1998ல் மரண தண்டனை வழங்கியது. மூவரும் 1991லிருந்து சிறையில் உள்ளனர். மரண தண்டனைக்கு எதிரான மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தால் 08.10.99 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. • 17.10.1999 அன்று ஆளுநர் முன் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் மாநில அரசை கலந்தாலோசிக்காமலே 27.10.1999 அன்று கருணை மனுவை தள்ளுபடி செய்தார். இப்படி செய்தது தவறு என 25.11.1999 தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்கச் சொன்னது. 25.04.2000ல் ஆளுநர் மீண்டும் கருணை மனுவை தள்ளுபடி செய்தார். கருணை மனு குடியரசுத் தலைவருக்கு 26.04.2000 அன்று அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் கருணை மனுவை 12.08.2011ல் நிராகரித்தார். மூவருக்கும் இத்தகவல் 29.08.2011 அன்று தரப்பட்டது. • கருணை மனுவின் மீது முடிவு எடுக்காமல் காரணம் இன்றி தாமதப்படுத்துவது சித்தரவதை என்றும், அப்படிச் செய்வது உயிர் இருக்கும் கடைசி வினாடிவரை உள்ள உயிர் வாழும் உரிமையை மீறுவதாகும் என்றும், உச்ச நீதிமன்றம் சத்ருகன் சவுகான் வழக்கில் 21.01.2014 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. • மூவர் வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் கூலம் வைஷ்ணாவதி கருணை மனு கோப்பு 5 வருடங்கள் ஒரு மாதம் ஏதோ ஒரு மேசை அறையில் தங்கியிருந்தது எனவும், பின்னர் குறிப்பு எழுதப்பட்டது எனவும், அதன் பின்னர் 5 வருடங்கள் 8 மாத தாமதத்திற்கு விளக்கம் ஏதுமில்லை எனவும் சொன்னார். • 11 ஆண்டுகளுக்கு மேலான தாமதத்திற்கு ஏற்கக்கூடிய காரணம் ஏதும் இல்லாததால், உயிர் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது. அதனால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. தீர்ப்பின் கடைசிப் பத்தி இந்த ஆயுள் தண்டனையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவுகள் 432, 433ஏவுக்கு உட்பட்டது எனச் சொன்னது. திரும்பவும் 2011க்குச் செல்வோம் மூவர் தூக்கு 12.08.2011ல் உறுதியான பிறகு, முதலில் ஜெயலலிதா தமது அரசு செய்ய எதுவும் இல்லை என்றார். களத்தில் கழகங்கள் எதுவும் இல்லாமலே தமிழகம் கொந்தளித்தது. பற்றியெரிந்தது. செங்கொடி எரிந்து சாம்பலானதும் நடந்தது. அப்போது ஜெயலலிதா மூவர் தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத் தீர்மானம் கொண்டு வந்தார். மூவர் தூக்கு தண்டணை ரத்து கோரிக்கை தமிழக மக்களால் வலுப்பெற்றதேயொழிய, ஜெயலலிதாவாலோ கருணாநிதியாலோ அல்ல. சென்னை உயர்நீதிமன்றம் 20287, 20288 20289/2011 எண்ணிட்ட ரிட் மனுக்களில் தூக்குத் தண்டனைக்கு தடை விதித்தது. பின்னர் தான், வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாறி அங்கே 18.02.2014 தீர்ப்பும் அதன் பின்பு 19.02.2014ல் தமிழக அரசின் எழுவர் விடுதலை அறிவிப்பும் வந்தன. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது, இன்றளவில் முழுமையாக சட்டப்பூர்வமானதாகும். இதில் மறு பரிசீலனை சாத்தியமேயில்லை எனச் சொல்ல முடியும். ஆக விவாதம் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய முடியுமா என்பது தொடர்பானது. (அதிலும் கூட, 433ஏ பிரிவுப்படி ஆயுள் தண்டனை ரத்து, 14 வருடங்கள் சிறையில் இருந்தவர்கள் விசயத்தில் மட்டுமே சாத்தியம்) விவாதம் சட்டம் சார்ந்தது மட்டுமா? பிரச்சனை தமிழர் விவகாரமாக சுருங்குமா?அல்லது ஜனநாயக கரிசனமாக மாறுமா? மூவர் தண்டனை குறைப்பில் சிஆர்பிசி 435படி மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என முதல்வர் சட்டமன்றத்தில் சொன்னதே சரியல்ல என்ற வலுவான கருத்து உள்ளது. மூவர் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் இபிகோபடிதான் உறுதி செய்தது, ஆகவே, 435அய் நாடியிருக்க வேண்டாம் எனவும், நாடியதால்தான் மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் இந்தக் கருத்து சட்டரீதியாக நீள்கிறது. மாநில அரசுக்கு ஆயுள் தண்டனையை குறைப்பதற்கான சுதந்திரமான அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 மற்றும் சிஆர்பிசி 432ன் கீழ் உள்ளது என்பதும் கூட வலுவான கருத்தாகவே இருக்கின்றது. இங்கேதான் சட்டப் பிரிவுகள், நீதிமன்றங்கள் தாண்டி மக்கள் மன்றம் ஜெயலலிதா அரசை ஆயுள் தண்டனையை நீக்க நிர்ப்பந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குற்றவியல் சட்டப்பிரிவு 432, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161படி தண்டனை குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. 20.02.2014 தேதிய உச்சநீதிமன்ற ஸ்டேட்டஸ் குவோ உத்தரவும் ஆயுள் தண்டனையை ரத்து செய்யும் அரசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. மாறாக அதிகாரம் பயன்படுத்தப்பட்ட முறை பற்றியே கேள்வியும் கவலையும் வெளிப்படுத்தப்பட்டன. தடை விரைந்து நீங்க, சட்டமும் நீதிமன்றங்களும் வழக்கறிஞர்களும் அதனதன், அவரவர் வேலைகளை பார்த்துக் கொள்ளட்டும். நாம் மக்களின் கருத்து ரீதியான மற்றும் களரீதியான அணிதிரட்டல் பற்றி யோசிப்போம். ஜெயலலிதாவின் தண்டனைக் குறைப்பு அறிவிப்பு, திமுக காங்கிரஸ், திமுக தேமுதிக காங்கிரஸ் கூட்டணிகளை சிக்கலாக்கியுள்ளது என்பதுதான் இம்முறை தனிக்கவனம் பெறும் அரசியல் காய் நகர்த்துதல் ஆகும். மற்றபடி அவர் முடிவில், நாடாளுமன்ற தேர்தலோடு தமிழர் நலன் மீதான கரிசனத்தைத் தொடர்புப்படுத்தப் பார்க்கிறார் என்பது, சுலபமாகப் புலப்படும் ஒரு விசயமே. நாட்டின் பிரதமர் படுகொலை தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை ரத்தா என்ற கேள்வி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டப்பிரிவுகள்படி இந்தியாவில் எந்த ஒருவரையும் கொலை செய்த எவருடைய ஆயுள் தண்டனையும் ரத்து செய்யப்பட முடியும் என்றால், ராஜீவ் காந்தி வழக்கில் மட்டும் வேறு அணுகுமுறை கோருவது, சிலர் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் சமமானவர்கள் (மேலானவர்கள்) என்று சொல்வதாகாதா? பிரச்சனையை வெறுமனே தமிழர் விவகாரமாகக் குறுக்குவது ஆபத்தானதாகும். பிரச்சனை உலகளாவியது. நாடு தழுவியது. விடாப்பிடியான முழு நிறைவான ஜனநாயகம் தொடர் பானது. அப்சல் குருவிற்கு உச்சநீதிமன்றம் அநியாயம் இழைத்தது. இப்போது மரண தண்டனைக் குறைப்பு, மரண தண்டனைக்கு உள்ளானோர் குடும்பத்திற்கு பார்க்கும் உரிமை போன்றவை பற்றி எல்லாம் ஏதேதோ சொன்னாலும், ஜனநாயகத்தின் முன்னால் மக்கள் மன்றத்தின் முன்னால் உச்சநீதிமன்றத்திற்கு பாவ மன்னிப்போ பரிகாரமோ கிடையாது. (சட்டப்படி அல்லாமல், தேசத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்த மரண தண்டனை என்றார்கள்). கடுமையான அரசு, கடுமையான சட்டங்கள், மரண தண்டனை, ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள், நவீன முதலாளித்துவ அரசுகளின் ஆயுதங்களாகும். தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். எதிர்ப்புப் போராட்ட அரசியல் கைதிகளின் ஆயுள் தண்டனை 14 ஆண்டுகளுக்கு மிகாமல் குறைக்கப்பட வேண்டும். இது ஜனநாயகத்தின் குரல். மணிப்பூர், காஷ்மீர், சட்டிஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட் சிறைகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் பசுமை வேட்டை மூலமும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் மனித உரிமைப் பிரச்சனைகள் ஜனநாயகத்தின் முன் உள்ள சவால்களே. இந்தியாவில் தமிழகத்தில் இஸ்லாமிய அரசியல் கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களது தண்டைனை நீக்கத்தையும் நாம் கோருவோம். தமிழர், காஷ்மீரி, மாவோயிஸ்ட், இஸ்லாமியர் அடையாளங்கள் தாண்டி, ஒடுக்குமுறை, சித்தரவதை, அதீத தண்டனைகளை எதிர்த்திடுவோம். செத்த பின்பு சொர்க்கம் என்றால் இப்பிறவி என்னாச்சு என்ற கேள்வி பொருள் நிறைந்தது. ஆனால் ஜெயலலிதாவோ நல்ல காலம் இப்போது வராது பிறகு ஒருகாலம்தான் வரும் என்று பல விசயங்களில் பல நேரங்களில் சொல்லி வருகிறார். 2023ல் ஒரு வழியாக நல்ல காலம் வரும் என்றும் அதற்கு முன் 40க்கு 40 தந்தால் நல்ல காலம் என்றும் தராவிட்டால் டெல்டா பாலைவனம் ஆகும் என்றும் ஜெயலலிதா சொன்னதை நாம் மறக்க முடியாது. 2011ல் 100 நாட்கள் ஆட்சி நிறைவு மற்றும் நிதிநிலை அறிக்கை தாக்கல் நேரத்தில் ஜெயலலிதா பாடினார்: வருந்தாதே ஏழை மனமே வருங்காலம் நல்ல காலம் மனம்போல இன்பம் நேரும் திருநாளும் வந்து சேரும் எழுவர் விடுதலையிலிருந்து தமிழக மக்களின் அமைதி, வளம், முன்னேற்றம் வரை நல்ல காலமும் இன்பமும் திருநாளும் தாமாக வராது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் மூலமே அவை சாத்தியமாகும்.

...Full Text

দুঃসাহসীরা বারবার জন্ম নেয়

(কমরেড সরোজ দত্তকে মনে রেখে) Then I realized I had been murdered They looked for me in cafes, cemetaries and churches … but they did not find me They never found me? No. They never found me গার্সিয়া লোরকা (“The fabble and Round of the Three Frineds”, Poet, নিউ ইয়র্ক, ১৯৩৯) কি অাশ্চর্য সমাপতন, অাগস্ট (১৯) ১৯৩৬, অাগস্ট (৫) ১৯৭১। ১৯৩৬

...Full Text

दिल्ली चुनाव के नतीजे के बाद उतराखंड

दिल्ली चुनाव के नतीजे के बाद उतराखंड में आगामी 2017 में दिल्ली दोहराने की चर्चा गरमा रही है।जमीनी सच्चाई यह है कि इसे उत्तराखंड में दोहराना तो दूर उस दिशा में बढना असंभव है जब तक कि दिल्ली जीतने के लिए किए गए कठोर प्रयास और योजना के अनुभव से सीखने की दृढ़ इच्छा न हो। दिल्ली की सफलता की खास बात यह रही कि वहां आम जनता की रोजमर्रा की समस्याओं को लेकर समाज के सबसे कमजोर और शोषित हिस्सों की गोलबंदी पर आप पार्टी ने विशेष ध्यान दिया और दिल्ली के कोने कोने तक एक सार्थक विकल्प के निर्माण हेतु प्रचार आभियान के लिए हजारों पढे लिखे युवा कार्यकर्ताओं को तैयार किया। इस संगठित शक्ति ने ही जीत हेतु नेटवर्क तैयार किया। युवा श़क्ति ने आम जनता से सीधा संवाद कर सभी परंपरागत तरीकों को धता बताते हुए एक व्यापक जन गोलबंदी करते हुए धर्म, जाति, लिंग भेद को वहां पनपने ही नहीं दिया। परिणाम स्वरूप दिल्ली की जनता ने दिल्ली में नरेन्द्र मोदी और अमित शाह के पराक्रम को धो डाला। नए विकल्प के लिए ह्जारों कार्यकर्ताओं के अंदर एक आत्मविश्वास का सृजन इस अनूठे प्रयोग की खास बात रही। निश्चित ही इस प्रयोग की कडी परीक्षा इस बात में निहित है कि कांग्रेस-भाजपा द्वारा पोषित देश को बर्बाद करने वाली जन विरोधी आर्थिक नीतियों से यह प्रयोग कैसे दो चार होता है? अब जहां तक उत्तराखंड की बात है तो यहां राज्य बनने के बाद कांग्रेस-भाजपा की लूट खसोट की राजनीति चली है - उसने आंदोलनकारियों के बढे हिस्से को पतित कर दिया है। यू०के०डी० का पतन जग जाहिर है और आज उत्तराखंड में आप की टोपी लगाकर जनता का खैर ख्वाह बनने की कोशिश कर रहे हैं - उनमें से कई कांग्रेस-भाजपा सरकारों के समक्ष दरबारी से रहे हैं। असल में उत्तराखंड में एक नए राजनीतिक विकल्प के लिए आत्म विश्वास पैदा करने के लिए एक नई साझा राजनीतिक संस्कृति का सूत्रपात करना होगा। इस हेतु तय करना होगा कि

 • भाजपा-कांग्रेस से कोई समझौता नहीं।
 • राज्य आंदोलनकारी की सुविधा और सर्टिफिकेट मांगने के लिए किए जा रहे प्रयासों पर विराम।
 • उत्तराखण्ड के विकास के लिए जल, जंगल, जमीन की रक्षा के लिए एक जुटता और इस सोच को केन्द्र में रखते हुए शिक्षा, स्वास्थय, पानी व अन्य सभी बुनियादी सुविधाओं के लिए चरणबद्ध आंदोलन।
 • धर्म, जाति व लिंग भेद के विरुद्ध संघर्ष करते हुए मजदूर, किसान, महिला, छात्र व युवाओं की गोलबंदी।
 • राज्य बनने के बाद हुए घोटालों की सी०बी०आई० जांच की मांग।
 • आपदाओं से सबक लेते हुए विकास हेतु एक तथ्यात्मक व सांइटिफिक नीति का निर्माण।
 • उपरोक्त के अलावा और भी जरूरी बिन्दु हैं जिन्हें जोडा जा सकता है। लेकिन इसे साझा प्रयासों से ही किया जा सकता है। यदि हम विचार व बदलाव के लिए तत्पर मित्र तैयार हों तो निकट भविष्य में साझा रणनीति तैयार की जा सकती है।

  ...Full Text

  दिल्ली ने मोदी को दिया पहला बड़ा झटका

  लोकसभा चुनाव में मोदी के नेतृत्व में भाजपा की जबर्दस्त जीत के महज नौ महीनेे बाद ही दिल्ली के विधानसभा चुनाव में दिल्ली ने भाजपा को बड़ी भारी पराजय झेलने पर मजबूर कर दिया है. मई 2014 में हुए चुनाव में भाजपा ने दिल्ली की सभी सातों लोकसभा सीटों पर जीत दर्ज की थी, जिसमें दिल्ली के 70 में से 60 विधानसभा क्षेत्रों में उसे बढ़त हासिल हुई थी. फरवरी 2015 में हुए दिल्ली विधानसभा चुनाव के परिणामों ने स्थिति को चमत्कारिक ढंग से उलट दिया है, और इस बार भाजपा महज तीन सीटों तक सिमट कर रह गई, जबकि आम आदमी पार्टी (‘आप’) को दिल्ली में पचास प्रतिशत से ज्यादा वोट मिले हैं और इतनी बड़ी तादाद में सीटें मिली हैं कि वे कुल सीटों के 95 प्रतिशत से भी अधिक हैं. दिल्ली के जनादेश को उसकी अभूतपूर्व प्रबलता और धारदार स्पष्टता के चलते अतिविशिष्ट माना जा रहा है. निस्संदेह, इस जनादेश को बुनियादी तौर पर दिल्ली के विशिष्ट परिप्रेक्ष्य में ही देखा जाना चाहिये, जहां ‘आप’ ने, अरविंद केजरीवाल द्वारा नाटकीय ढंग से मुख्यमंत्री पद से इस्तीफा दिये जाने से पहले, अपने 49 दिनों के अल्पकालीन शासन में ही जनता के बीच लोकप्रियता हासिल कर ली थी. इस बार दिल्ली ने दोनों हाथ खोलकर ‘आप’ को जितना ज्यादा से ज्यादा संभव हो सका, मजबूत जनादेश और अपने वादों को यथार्थ में बदलने का पूरा मौका दे दिया है. दिल्ली के शहरी गरीबों और हर वंचित मुहल्ले ने आप के पक्ष में डटकर मतदान किया है, और उसी तरह दिल्ली के मध्यवर्ग के बड़े हिस्से ने भी ‘आप’ को ज्यादा-से-ज्यादा वोट दिये हैं. भाजपा को जरूर ऐसी स्थिति आने का अंदाजा पहले ही लग गया होगा, और इसीलिये उसने अपने पास जितने भी संसाधन थे, सबको इस चुनाव में झोंक दिया था. मोदी ने अपनी सरकार की पूरी ताकत लगाकर, खुद अगली कतार में रहकर चुनाव अभियान का नेतृत्व किया. अमित शाह ने अपनी वोट खींचने की चतुराई वाली सारी तरकीबों का इस्तेमाल किया और अपने बहुचर्चित नेटवर्क को पूरी तरह से काम पर लगाया. लेकिन यह एक ऐसा चुनाव था जिसमें भाजपा की लगभग हर चाल का उल्टा नतीजा निकला और उसने भाजपा की इस चमत्कारिक पराजय में ही योगदान किया. और मोदी सरकार के लिये तथा खुद मोदी के प्रभामंडल के लिये इसे ‘प्रतिष्ठा की बड़ी लड़ाई’ बनाने के बाद अब कोई रास्ता नहीं बचा जिससे भाजपा इस पराजय को तुच्छ बता सके और इसका ठीकरा चंद स्थानीय कारकों के मत्थे फोड़ सके. दिल्ली के चुनाव से दो बिल्कुल स्पष्ट संदेश निकल रहे हैं जिनकी अनुगूंज आने वाले दिनों में दिल्ली की सीमाओं से बाहर भी सुनी जायेगी. दिल्ली के शहरी गरीबों और मेहनतकश जनता और नौजवानों की यह दावेदारी, कारपोरेट लूट और बड़े पैमाने पर जनता को वंचना का शिकार बनाने तथा उनके अधिकार छीनने के खिलाफ चल रही लड़ाई के लिये एक मददगार परिघटना है. विभिन्न पार्टियों के मतदाताओं के ‘आप’ की ओर चले जाने के बारे में बातें करने के बजाय, हमें जनता की इस निर्णायक दावेदारी को मंजूर करना होगा और उसका सम्मान करना होगा. चुनाव परिणाम के संदेश का दूसरा विशिष्ट पहलू है इसके जरिये भाजपा द्वारा छेड़े गये साम्प्रदायिक एजेंडा को, और मोदी शासन की बढ़ती निरंकुश फरमानशाही का स्पष्टतः मुंहतोड़ जवाब दिया जाना. इसके साथ ही चुनाव परिणाम में ‘आप’ मॉडल की राजनीति के लिये भी एक गहरा संदेश निहित है. भाजपा ने ‘आप’ की साख गिराने और उसे ऐसी पार्टी के बतौर चिन्हित करने की कोशिश की थी जो अराजकतावाद की पैरवी करती है और उस पर अमल भी करती है. आप की सुस्पष्ट विजय इस बात को स्पष्ट रूप से दिखा देती है कि दिल्ली की जनता ने ऐसा नहीं माना था. लोग अरविंद केजरीवाल द्वारा पदत्याग किये जाने के गलत फैसले पर जरूर निराश और क्रोधित थे, लेकिन ‘आप’ द्वारा शासन और आंदोलन को मिलाते हुए एक नई राह तैयार करने और ‘राजनीतिक प्रतिष्ठान की वीआईपी संस्कृति’ के आभूषणों का परित्याग करने के प्रयास को जनता का तब तक समर्थन मिलता रहेगा जब तक ‘आप’ अपने बुनियादी वादों के प्रति सच्चा बना रहेगा. ‘आप’ का राजनीतिक क्रमविकास दिल्ली की सीमाओं से कहीं परे भी रुचि और आकर्षण पैदा करने वाला विषय बना रहेगा. दिसम्बर 2013 में हुए दिल्ली विधानसभा के चुनाव में पहली बार हिस्सा लेने पर ही उसे भारी शुरूआती सफलता मिली थी, जिसकी लहरों पर सवार होकर ‘आप’ ने 2014 के लोकसभा चुनाव में अपना जाल दूर-दूर तक फैला देने का प्रयास किया था, जबकि खुद केजरीवाल वाराणसी में मोदी के खिलाफ उम्मीदवार बने. केजरीवाल ने वापस लौटकर इस्तीफा देने के मामले में माफी मांगी और ‘आप’ ने लगभग शुद्ध रूप से दिल्ली-आधारित दृष्टिकोण ग्रहण कर लिया, जिसमें उन्होंने और अपने सारे संसाधनों एवं ऊर्जा को दिल्ली पर केन्द्रित कर दिया. अब यह देखना बाकी है कि आप दिल्ली में शासक पार्टी की भूमिका के साथ अपनी राजनीतिक उपस्थिति का विस्तार करने तथा राष्ट्रीय धरातल पर अपनी भूमिका को बढ़ाने का तालमेल बैठाने के लिये कैसे प्रयास करती है. मतदान के बाद किया गया दिल्ली के वोटों का विश्लेषण यह साफ बताता है कि ‘आप’ को मिले वोटों का सबसे बड़ा हिस्सा दिल्ली के शहरी गरीबों और वंचनाग्रस्त इलाकों से और दलितों एवं अल्पसंख्यकों से आया है, जो परंपरागत रूप से कांग्रेस के साथ रहे हैं. कुछेक प्रेक्षक एवं कार्यकर्ता स्वभावतः ‘आप’ के उत्थान को ‘वर्ग-युद्ध’ के लक्षण के बतौर देखने को लालायित होंगे, लेकिन याद रखना होगा कि ‘आप’ खुद ही अपनी राजनीति की व्याख्या ‘वर्ग संघर्ष के बिना वर्गीय राजनीति’ के बतौर करता है और केजरीवाल ने आर्थिक दर्शन की जो रूपरेखा खींची है वह पूरी तरह से नव-उदारवाद के मुक्त बाजार पर जोर की पूरी तरह हिमायत करती है, जबकि इसके जरिये अनिवार्यतः जिस भ्रष्टाचार का जन्म होता है, उसको नापसंद करती है. एक राजनीतिक संगठन के बतौर ‘आप’ का चाहे जैसे भी क्रमविकास हो, दिल्ली का जनादेश निश्चित रूप से नरेन्द्र मोदी शासन की रहनुमाई में चलाये जा रहे कारपोरेट-साम्प्रदायिक हमले के खिलाफ जारी लड़ाई में देश भर की जनता के लिये जरूर प्रेरणा का स्रोत बनेगा. अगर 2014 के चुनावों के नतीजे भाजपा के पक्ष में रहे, तो 2015 की शुरूआत इससे बिल्कुल भिन्न दिशा में हुई है. वक्त आ गया है कि प्रतिरोध और परिवर्तन की आवाजें भारत के कोने-कोने में और जोरदार ढंग से, और भी स्पष्ट रूप से प्रतिध्वनित हों.

  ...Full Text

  बिहार मे संगठित किसान आंदोलन के नेता सहजानन्द सरस्वती

  बिहार मे संगठित किसान आंदोलन के नेता सहजानन्द सरस्वती का आज जन्म दिन है। आज जब उनके नाम पर तरह तरह की राजनीति हो रही है, सहजानन्द के विचारों के क्रमविकास पर रामजी राय द्वारा कुछ दिन पहले फ़ेसबुक पर लिखा यह पोस्ट साझा किया जा रहा है। "ग्रामीण सर्वहारा अपने अधिकारों, कर्तव्यों और जिम्मेदारियों के बारे में वाकिफ होने लगा है जब इसकी वाकिफियत पूरी हो जाएगी तो विनाश का तांडव नृत्य शुरू होगा और वर्तमान अन्यायपूर्ण भूमि व्यवस्था लड़खड़ाने लगेगी।" - स्वामी सहजानंद सरस्वती सहजानंद सरस्वती के विचारों का क्रमविकास बिहार और खासकर भोजपुर के किसान संघर्ष की बदलती धारा और किसान सभा के क्रांतिकारीकरण की प्रक्रिया की सुंदर झांकी प्रस्तुत करता है। उत्तर प्रदेश के गाजीपुर जिले के रहनेवाले सहजानंद सरस्वती उर्फ नवरंग राय प्रारंभ में भूमिहार महासभा में शामिल हुए थे और इसके पीछे उनका लक्ष्य था ब्राह्मण का दर्जा पाने के लिए भूमिहारों के दावे को मजबूत करना। लेकिन वे इतने से संतुष्ट न हुए और जल्द ही भूमिहार जाति के युवा पीढ़ी को बड़े पैमाने पर असहयोग आंदोलन में भाग लेने को उत्प्रेरित करने लगे। 1925-26 आते-आते यह महासभा नरमपंथी, जिसका नेतृत्व सर गणेश दत्त कर रहे थे, जो एक बड़े जमींदार और अंग्रेजों के जीहुजूरिए थे, और गरमपंथी, जिसके नेता सहजानंद थे, इन दो गुटों में विभाजित हो गई। शीघ्र ही पटना के निकट बिहटा में स्थित सहजानंद का आश्रम किसान आंदोलन का केंद्र बिंदु बन गया, जो न केवल भूमिहार जाति को, बल्कि अन्य जातियों के पट्टेदारों को भी आकर्षित कर रहा था। अब ध्नी भूमिहारों ने उन्हें चंदा देना बंद कर दिया और सहजानंद इस निष्कर्ष पर पहुंचे कि "जातीय सभाएं तथा ध्रर्म के नाम पर दिए दान के जरिए धनिक लोग इन सभाओं को अपने हाथ का खिलौना बनाकर रखना चाहते हैं और अपनी जमींदारी, अपना व्यापार और अपना प्रभुत्व दृढ़ कर लेते हैं, न कि परलोक या उपकार के लिए कुछ भी करते हैं।" स्वामी सहजानंद के अपने खुद के शब्दों में यह भी कम रोचक तथ्य नहीं है कि "किसान सभा बनाने के पीछे मेरा उद्देश्य केवल प्रचार और आंदोलन के जरिए किसानों के दुख दूर करना था और इसके जरिए किसानों और जमींदारों के बीच झगड़े खत्म कर देना था। क्योंकि ये झगड़े भड़क सकते थे और इनसे आजादी की लड़ाई में सभी लोगों की एकता टूटेगी। इसलिए किसान सभा का संगठन बनाते समय मैं पूरा समझौतावादी था।" "1941 आते-आते किसान सभा उन शोषित और सताए हुए लोगों की है जिनका भाग्य खेती पर निर्भर करता है, यानी जो खेती पर ही जिंदा रहते हैं। जो लोग जितने ज्यादा सताए हुए हैं, वे किसान सभा के उतने ज्यादा नजदीक हैं और किसान सभा भी उतना ही उनके करीब है।" और 1944 में "वे लोग (मझोले और बड़े काश्तकार) अपने फायदे में कुछ हासिल कर लेने के लिए किसान सभा का इस्तेमाल कर रहे हैं और हमलोग भी सभा को मजबूत करने के लिए उनका इस्तेमाल कर रहे हैं या पिफर करने की कोशिश कर रहे हैं। ऐसा तब तक चलेगा जब तक निचले तबके के किसान अपने सही आर्थिक और राजनीतिक हितों को नहीं समझ जाते और अपनी जरूरतों को समझ कर अपने वर्ग की चेतना नहीं हासिल कर लेते। ऐसे उधर सर्वहारा या खेत मजदूर जिनके पास कोई जमीन नहीं है या नाम मात्र को जमीन है, ऐसे छोटे काश्तकार जो खेती करके किसी तरह जिंदा रह पाते हैं और कुछ भी नहीं बचा पाते, वे ही हमारे ख्याल से किसान हैं और आखिरकार उन्हीं को किसान सभा बनानी है और वे जरूर किसान सभा में आएंगे।" आगे चलकर स्वामी सहजानंद ने अखिल भारतीय संयुक्त किसान सभा नामक अलग संगठन बना लिया, जिसकी बुनियादी मांग थीः "भूमि और जल मार्गों तथा ऊर्जा और संपदा के सारे स्रोतों का राष्ट्रीयकरण और जिसकी फौरी मांग थी : जिनके पास विशाल भूसंपत्ति है उनकी भूमि का अधिग्रहण कर लिया जाए तथा इसे उनलोगों के बीच उचित ढंग से बांट दिया जाए जो भूमिहीन हैं अथवा बहुत छोटे प्लाटों के मालिक हैं।" और अंततः "ग्रामीण सर्वहारा अपने अधिकारों, कर्तव्यों और जिम्मेदारियों के बारे में वाकिफ होने लगा है जब इसकी वाकिफियत पूरी हो जाएगी तो विनाश का तांडव नृत्य शुरू होगा और वर्तमान अन्यायपूर्ण भूमि व्यवस्था लड़खड़ाने लगेगी।"

  ...Full Text

  जमीन का सवाल माले की राजनीति का शुरूआती और केंद्रीय सवाल रहा है

  भूमि अधिग्रहण के सवाल पर अन्ना के आन्दोलन का किसी वामपंथी दल द्वारा समर्थन से जो उन्मादग्रस्त होकर अल्लम-बल्लम बक रहे है, वे कौन है? संघी-भाजपाइयों के अलावा उनकी ही भाषा में बोलने वाले ये कौन लोग हैं? अन्ना के मंच पर किसी का जाना यह कैसे साबित करता है कि उसका अपना कोई मंच नहीं है या उसकी पार्टी भूमि अधिग्रहण के सवाल पर कुछ नहीं कर रही है. तो वामपंथ विरोधियों से यह कहना है कि अन्ना के इस मूवमेंट के पहले से वामपंथी किसानों को लामबंद करने में लगे हुए हैं, एक दम जमीनी स्तर पर. रहा भूमि अधिग्रहण के विरोध का सवाल, तो इस सवाल पर कोई वामपंथी अन्ना के आन्दोलन का समर्थन न करेगा तो क्या संघी गिरोहों द्वारा प्रायोजित तरह तरह के उन्माद का समर्थन करेगा या फेसबुक पर कुंठा उगलने वालों से जिरह करेगा. पहले तथ्य जान लिया करें. खाली जो टीवी पर नजर आता है उसी पर पूर्वाग्रह-दुराग्रह की 'सुगंध' न फैलाएं. जहाँ तक सीपीआई एमएल पर निशाना साधने वाले कुछ लोगों की बात है, तो उन्हें यह सनद रहे कि उनकी खुद की अपनी अस्मितावादी राजनीतिक परिणतियां क्या हैं। अगर आप वास्तविकता और तथ्यात्मकता में जरा भी यकीन रखते तो यह सरलता से ज्ञात हो जाता कि जब अन्ना को कोई खास लोकप्रियता नहीं मिली थी उसके बहुत पहले से माले आंदोलनरत रही है और हमारे प्यारे कामरेडों ने अनेक मोर्चे पर अपनी शहादत दी है। जमींन का सवाल हमारी राजनीति का शुरूआती और केंद्रीय सवाल रहा है। 16 मई के बाद फासीवाद के बड़े उभार के बाद भी दलित राजनीति -- BSP टाइप राजनीति की आतंरिक विसंगतियों का समुचित आत्मालोचना का अभाव और उसके पहले भी समय-समय पर त्रिशूल दीक्षा में दीक्षित होने के परिणाम से कुछ न सीखना जड़ता का बोधक है तथा झूठ पर आधारित संघी दुस्प्रचार शैली को अपना लेना फासीवादी शक्तियों के पक्ष में मिल जाने का प्रमाण है। और अभी इस समय संसद में जब सभी पार्टियां एक सुर से इस भूमि अधिग्रहण संबंधी बीजेपी की नीति का विरोध कर रही हैं तब इस विरोध के विपक्ष में खड़े होने की मंशा खतरनाक और संदेहास्पद है।

  ...Full Text

  It Isn’t ‘Terrorism’ If the Perpetrator is White ?

  Rania Khalek asked ‘Why can’t media describe Chapel Hill murders as terrorism? Submitted by Rania Khalek’ (Electronic Intifada, 17 February, 2015). Here are excerpts from her story. Deah Barakat, Yusor Abu-Salha and Razan Abu-Salha were remarkable individuals devoted to helping the

  ...Full Text

  Challenge Islamophobic and Racist Violence in the US and India

  The murder of three young Muslims in the US, followed by the brutal violence by US police on an aged Indian man, Sureshbhai Patel, have once again shone the spotlight on deeply entrenched Islamophobia and racism in the USA. In

  ...Full Text