கவிதை

பிணம்

அவர்கள் பொழுது விடியும் வரை

சேவல் எதிர்த்து எழும் வரை

பிணத்தை சித்திரவதை செய்தனர்

அதன் சதையில் ஆணியை நுழைத்தனர்

அதனை மின்விசிறியில் இருந்து தொங்கவிட்டனர்

சித்திரவதை செய்தவர்கள் ஒருவழியாய் சோர்ந்துபோய்

ஓர் இடைவேளை எடுத்தபோது

பிணம் தன் சுண்டு விரலை அசைத்தது

காயப்பட்ட கண்களைத் திறந்தது

ஏதோ முணுமுணுத்தது.

அது தண்ணீர் கேட்டதா?

அது ஒருவேளை ரொட்டி கேட்டதா?

அது அவர்களை சபித்ததா அல்லது மேலும் வதைக்கச் சொன்னதா?

சர்கன் பவுலஸ்

அரேபிய மொழிக் கவிதை

சிஅய்ஏ சித்திரவதைகள் தொடர்பாக

Back-to-previous-article
Top