சமீபத்தில் ராஜஸ்தான் காவல்துறை நடத்திய விசாரணையில், நீட் தேர்வுக்கான “கெஸ் பேப்பர்” ஒன்று தேர்வுக்கு முன்பே பரவி வந்தது தெரியவந்துள்ளது. அந்த வினாத்தாளில் 600-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களுக்கு உரிய விடைகள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பொறுப்பேற்று நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தேசிய தேர்வு முகமை மீண்டும் தேர்வை நடத்தத் தீர்மானித்துள்ளது!
கடந்த 10 ஆண்டுகளில் 89 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. JEE Mains 2021, NEET UG 2024, UGC NET 2024 போன்ற பெரிய தேர்வுகளில் ஏற்பட்ட கசிவுகள் உட்பட பல சம்பவங்கள் நடந்துள்ளன. தேசிய இது மாணவர்களின் கல்வி மற்றும் உழைப்பை மதிக்காத அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளது.
நீட் யுஜி 2026 வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை மற்றும் பாஜக அரசின் திறமையின்மை மற்றும் ஊழலின் இன்னொரு வெளிப்பாடாகும். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தனியார் பயிற்சி மைய மாஃபியாகளின் நலன்களுக்காக பலிகொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள் தொடர்ந்தாலும் கல்வி அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்காமல், ஊழல் நிறைந்த மற்றும் திறமையற்ற தேசிய தேர்வு முகமைக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.
ஏற்கனவே மாணவர்களின் தற்கொலை விகிதம் அதிகரித்து வரும் இந்தியாவில் (2020 முதல் 2021 வரை 4.5% அதிகரிப்பு), இத்தகைய வினாத்தாள் கசிவுகள் மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், பொறுப்பற்ற தனியார் அமைப்புகளின் கீழ் செயல்படும் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின் குறைபாடுகளையும் இது காட்டுகிறது. 22.79 லட்சம் நீட் 2026 தேர்வர்கள், இந்த வினாத்தாள் கசி ஊழலால் ஏமாற்றமடைந்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலம் ஏலத்திற்கு விடப்படும் பொருள் அல்ல!
அனைத்து தேர்வுகளும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் கொண்ட அரசு அமைப்புகளின் கீழ் நடத்தப்பட வேண்டும்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதற்கு நேரடியாக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்!
மேலும், தனியார் பயிற்சி மைய மாஃபியா வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு, பொதுக் கல்வியை திட்டமிட்டு சீர்குலைக்கும் இந்த செயல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.!
தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும்!
நீட் தேர்வு முறைகள் ரத்து செய்யப்பட வேண்டும்!
அகில இந்திய மாணவர் கழகம் (AISA)
