மார்ச் 30, 2026 அன்று இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான விவாதத்தின் போது, எதிர்பார்த்தது போலவே இந்தியாவின் ஒட்டுமொத்த கம்யூனிச இயக்கத்தையும் இகழ்வதற்கான மேடையாக நாடாளுமன்றத்தை ஆக்கிக் கொண்டது மோடி அரசாங்கம். ‘வெளிநாட்டு’ தத்துவத்தால் ஈர்க்கப்பட்டதுதான் கம்யூனிச இயக்கம் என்ற வழக்கமான ஆர்எஸ்எஸ் பொய்யை உள்துறை அமைச்சர் திரும்பவும் சொன்னார். சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற ஓர் உலகத்திற்கான பார்வையை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முன் வைத்தது முதல், மனித மானுட விடுதலைக்கான, உலகின் மிகச் சிறந்த மிகப் பரந்த உலகளாவிய தத்துவத்தைப் பின்பற்றுபவர்களான கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக, அமித்ஷா திரும்பத் திரும்பச் சொன்னது மிக மிக முட்டாள்தனமானது மிகவும் முட்டாள்தனமான, இந்தப் பொய்க் குற்றச்சாட்டை திரும்பத் திரும்பச் சொல்கிறார்.
இந்தியாவின் அற்புதமான தேச பக்தர்கள், இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கத்தின் (HSRA) முக்கிய தலைவர்களான சந்திரசேகர் ஆசாத், அசபுல்லாகான், பகத்சிங் மற்றும் அவர்களுடைய தோழர்களிடமிருந்து தொடங்கி, இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் அடுத்தடுத்த தலைமுறை நாயகர்கள் மற்றும் சுதந்திர இந்தியாவின் மக்கள் நலன்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்கான வெற்றியாளர்கள் போராளிகள் வரை கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். இந்திய கம்யூனிஸ்ட்களின் புகழ்மிக்க மரபுக்கு முற்றிலும் நேர்மாறாக, இந்திய விடுதலைப் போராட்ட நாள்களில் எதிர்முனையில் நின்று கொண்டு, காலனிய ஆட்சியாளர்களுடன் கூடிக் குலாவிக் கொண்டிருந்தவர்கள்தான் இந்த சங்கிப் படையினர். இப்போது அவர்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டின் நலன்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடகு வைத்தும், உழைக்கும் மக்களைக் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களைக் கொழுக்கச் செய்தும் வருகிறார்கள்.
இவர்கள் பேசும் இந்த நேரத்தை கவனத்தில் கொள்ளுங்கள். ஒடுக்குமுறை ஆக்கிரமிப்பு மற்றும் போர்க் கூட்டாளிகளான அமெரிக்கா-இஸ்ரேலிடம் வெட்கங்கெட்ட வகையில் சரணடைந்துவிட்ட, இந்திய தேச நலன்களுக்கு மிக மோசமாக துரோகமிழைத்துள்ள மோடி அரசு, அதை மறைப்பதற்காகவே நாடாளுமன்ற மைய அவையில் கம்யூனிஸ்ட்டுகளை தத்துவார்த்த ரீதியாக இகழ்ந்து பேசுகிறது. எவ்வாறாயினும் இந்த தத்துவார்த்த ரீதியிலான வேட்டையாடுதலானது ஆர்எஸ்எஸ்ஸின் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் வரையறை எல்லையையும் தாண்டிவிட்டது என்ற வரையறைக்குள் இனியும் இல்லை. தீய சொல்லாடல்களை திட்டமிட்டு உருவாக்கி, அரசுக்கு எதிரான ஒவ்வொரு மாற்றுக் கருத்துடையவரையும் ‘நகர்ப்புர நக்சல்’, ‘தொழில்முறை போராளி’, ‘தேச விரோதி’ என்று முத்திரைகுத்தி, குறி வைத்துத் தாக்கி, இந்தியாவின் வளங்களையெல்லாம் சில கார்ப்பரேட்டுகளின் கைகளில் மாற்றிக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரலோடு தொடர்புடையதாகும்.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி அரசாங்கத்தின் இந்த வீண் உளறல்களால் பகத்சிங்கின் வாரிசுகளை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. பாசிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரை ஒவ்வொரு முனையிலும் ஆழப்படுத்துவதின் மூலமாக கம்யூனிச இயக்கம் ஆர்எஸ்எஸ்ஸின் இந்த நிகழ்ச்சி நிரலைப் புறந்தள்ளும்.
திபங்கர்
பொதுச் செயலாளர்
இகக(மாலெ)விடுதலை
