தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களத்தில் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி

$articleData->title

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களத்தில் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி

குளச்சல் : தோழர் எஸ்.எம்.அந்தோணி முத்து

  இகக(மாலெ) கட்சியின் மாநில நிலைக் குழு உறுப்பினர், ஏஐசிசிடியு அகில இந்திய துணைத் தலைவர்.  தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர். வறிய மக்களின் வீட்டுமனை குடியிருப்பு உரிமைக்காக 1 மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். ஆராச்சா நில மீட்புப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார். அதனால் பல பொய் வழக்குகளை எதிர் கொண்டவர். 

தூத்துக்குடி:  தோழர் த. சகாயம்.

தோழர் சகாயம் ஏஐசிசிடியு மாநில துணைத்தலைவர். தூத்துக்குடி தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர். துறைமுக கண்டைனர் லாரி ஓட்டுநர்.  சங்கத் தலைவர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர் கோரிக்கையான தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பளம் ஆகியவற்றிற்காகப் போராடி வருபவர் 

இராமநாதபுரம்:  தோழர்.எஸ். முருகபூபதி  

கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர். வழக்கறிஞர்.  மாவட்டத்தில் மீனவர் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடர்ந்து  மக்களைத் திரட்டி வருபவர். மாவட்டத்தில் அரசு பள்ளிகள், கல்லூரிகளை தொடங்க முன்முயற்சி எடுத்தவர். 

புதுக்கோட்டை :  தோழர் க. மணிமேகலை.

   கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாவட்டத் தலைவரும் ஆவார். சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் உரிமைக்கான போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகிப்பவர். 

பாபநாசம்:  தோழர் மாசிலாமணி.

   கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களை அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தில் அணிதிரட்டி போராட்டங்களை நடத்தி வருபவர். வறிய மக்களின் அடிப்படை வசதிகள், குடியிருப்புக் கோரிக்கைக்கான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருபவர்.

 திருவிடைமருதூர்  (தனி ):  தோழர் டி.கண்ணய்யன்.

   விவசாயத் தொழிலாளர்களை அமைப்பாக்கி நெடிய போராட்டப் பாரம்பரியம் கொண்ட இவர், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டதால் காவல்துறை ஒடுக்குமுறை, வழக்குகளை சந்தித்து வருபவர். 

சிவகாசி:  தோழர் ச.சின்னதுரை (எ)  டிமிட்ரோ.

கட்சியின் மாவட்ட நிலை குழு உறுப்பினராகவும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். பட்டாசு தொழிலாளர்களை அமைப்பாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். மக்கள் கோரிக்கைகளுக்கான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். 

வீரபாண்டி: தோழர் அன்பு என்கிற அன்பழகன்.

   கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாவட்டத் தலைவர். இடதுசாரி இயக்கத்தில் பணியாற்றிய நீண்ட பாரம்பரியம் இவருக்கு உண்டு. அத்திப்பட்டி சூரியூர் ஏழை விவசாயிகளின் நிலப் பிரச்சனையில் தலைமையேற்று போராட்டம் நடத்தி வழக்குகளை சந்தித்தவர். 

ஏற்காடு ( தனி ): தோழர் கோபி.

கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்.மலைவாழ் மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான, வாழ்விட வசதிகளுக்கான, வன உரிமைக்கான போராட்டங்களை முன் நின்று வழி நடத்தியவர். 

வேடசந்தூர்: தோழர் ஆர்.ரவி.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், ஏ ஐ சி சி டி யு தேசியக் குழு உறுப்பினர், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகள் வகிக்கிறார். இடதுசாரி இயக்க முன்னணி செயல்வீரராக பல்வேறு மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன் நின்று நடத்தியவர். 

மேலூர்: தோழர் மெய்யர். 

கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர். செங்கொடி பதாகையின் கீழ் பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கானப் போராட்டங்களை முன் நின்று நடத்தியவர். சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய டங்ஸ்டன் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் முன் நின்றவர். 

திருப்பெரும்புதூர் :  தோழர் தமிழரசன். 

பன்னாட்டு நிறுவனமான மதர்சன் தொழிலாளி. தொழிலாளர் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றியதால் பழிவாங்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் மண்டல ஒருமைப்பாடு மன்ற வேலைகளில் மக்கள் மாமன்ற வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

போடிநாயக்கணூர் : எஸ். பாண்டிக்குமார்

          வழக்கறிஞர். ஆய்வு மாணவர். அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்.


 

 

 

 


08 April, 2026